இராமன் தங்கிய புல்லனை அருகில் மண்ணில் பரதன் இருத்தல்  

2301.அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான்.

     (பரதன்) அல்-இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்-
(தன்)நீண்ட கண்களிலிருந்து  வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல்
அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் -
மலையில் விளையும்
கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைத்து
உயர்ந்த
தோள் வீரன் வைகிய
-வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த
தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த;  புல்லணைமருங்கில்-
புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்;  தான்-; பொடியின் -
மண்புழுதியின்கண்;  வைகினான் -தங்கியிருந்தான்.

     இராமனைப் போலவே தன்னையும் அத்தகைய துன்பங்களுக்கு
ஆட்படுத்திக்கொள்ளும் மனநிலையில்பரதன் உண்ணாமல் உறங்காமல்
புல்லணைப் பக்கலில் மண்ணில் தங்கினான் ஆம். இராமன் புல்அணையில்
தங்களை ‘எம்பிரான் புல் அணை வைக’ என்ற (4276) இலக்குவன்
கூற்றாலும் உணர்க. இரவில் கண்ணீர் அருவி ஆடினன் என்பதால்
உறங்காமலும் இருந்தான்என்பதாம்.                               58