2305.அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.

     அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து;  அடைந்த தேவர்தம் - அங்கே உள்ள
தேவர்களது;  முடி உற- தலைமீது  படும்படி; பரந்தது - (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் - ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

     புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை
முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும்
நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி
கூறியவாறு. ‘ஏ’ காரம் ஈற்றசை.                                   3