232.‘தினைத் துணை வயிறு
     அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை
     வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும்
     யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார்
     இல்லை. மன்னனே!’

     எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று
வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி.         55-1