2325.‘ “ மா முனிவர்க்கு உறவாகி
     வனத்திரைடயேவாழும்
கோ முனியத் தகும்” என்று,
     மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற்
     படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ்
     என இப்பொழுது ஆகாதோ?’

     ‘மா முனிவர்க்கு - பெரிய தவசிகளுக்கு; உறவாகி - இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் - காட்டிடத்தில் வாழும்; கோ -
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது -
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் - போர்முனையில்
சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்;
ஏழு கடற் படை என்றாலும் - ஏழு கடல் அளவு சேனை என்றாலும்;
முனையின் சிறு கூழ் என
- பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்
கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ - அனைத்தும் அழிந்து
போகாதோ (போகும்.)

     இராமனது குணங்களைக் குகன் நன்குணர்ந்தவன் ஆதலின்,
இராமனுக்கு உதவுவதாக, நன்றிக்கடன்செய்வதாக இதுகாறும் கூறிப் பரதனை
எதிர்க்கத் துணிந்தவன், அச்செயல் இராமனுக்கு உகப்பாகாது என்பதையும்
அறிந்து வைத்துள்ளான் என்க. அது இடைப்புகுந்த வழி போரின் வேகம்
குறையும்தளர்ச்சி வரும் ஆதலின், மனத்திற் சிறிதும் அக்கருத்திற்கு இடம்
கொடுக்காது போர்செய்தல்வேண்டும் என்றானாம். பசித்த பசுவின் பசுவின்
முன் சிறிய பயிர் உண்ணப்பட்டுமாய்ந்து போதல் போல என்முன்
இச்சேனை கணத்தில் அழியும் என்றாள். ‘கொள்ளாதே’ ‘ஏ’காரம் அசை. 23