2328. | ‘கல் காணும் திண்மையான்; கரை காணாக் காதலான்; அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்;- மல் காணும் மணி நிறத்தாய்!- மழை காணும் மணி நிறத்தாய்!- ‘நிற் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன்’ என்றான். |
‘மல்காணும் திரு நெடுந்தோள் - மற்போரில் எல்லை கண்ட அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய்- கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த திருமேனி அழகனே!; கல்காணும் திண்மையான்- மலையைக் கண்டாற் போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான்- (இராமன் பால்) எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்; காணில்- வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்- இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை உடையவன் (ஆகிய இத்தகைய குகன்); நெறி எதிர் -நீசெல்கின்ற வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் - உன்னைப்பார்க்கும் மனம் உடையவனாய்; நின்றனன் ‘என்றான் - நின்றுகொண்டுள்ளான்’ என்று சொன்னான்சுமந்திரன். குகன் பரதனை எதிர்க்க நின்றவனே ஆயினும் இராமன்பால் பேரன்புடையவனாக அச்சுமந்திரனால்அறியப்பட்டவன் ஆதலால் இராமனை வரவேற்கச் செல்லும் பரதனை எதிர்பார்த்துக் கண்டு மகிழவே நின்றதாகச் சுமந்திரன் தன் போக்கில் கருதினான் என்க. பரதன் கங்கையின் வடகரைப்பகுதியில் கங்கைக் கரையோரமாக நில்லாமல் உள்ளே தள்ளி நிலப்பகுதியில் சிறிது தொலைவில் நிற்றலின் காண்பார்க்குக் குகனது சீற்றத் தோற்றம் புலனாகாமையும் பொதுத்தோற்றமே அறியப்படுதலும் உண்டாயிற்று. மேனி அழகாலும், நிறத்தாலும் இராமன், குகன், பரதன் மூவரும் ஓர் அணியாதல் பெறப்படும். 26 |