2376.‘எடுத்த மா முடி சூடி, நிண்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றளது யாது?’ என்றான்.

     (பின்பு முனிவன்) ‘ஐய! - பரதனே!;  நின்பால் இயைந்து  அடுத்த
பேர்அரசு - உன்னிடம் வந்து தானே சேர்ந்த கோசல ராச்சியத்தை; நீ
எடுத்த மாமுடி சூடி
- நீ உயர்ந்த திருமுடியைச் சூடிக்கொண்டு;
ஆண்டிலை
- ஆளாமல்; மூசு தூசு உடுத்து -உடம்பைப் போர்த்து
மரவுரியை உடுத்துக்கொண்டு; முடித்து - திரித்துக் கட்டின; வார்
சடைக்கற்றையை
- நீண்ட சடைத்தொகுதியை உடையவனாய்; நண்ணுதற்கு-
வனத்தின்கன் வந்து பொருந்துதற்கு; உற்றுளது யாது?’ - நேர்ந்த காரணம்
என்ன?; என்றான் - என்றுகேட்டான்.

     எடுத்து  - உயர்த்திய,  உனக்கென்று உன் தாயால் எடுத்து
வைக்கப்பெற்ற என்றும் ஆம்,மரவுரி உடம்பில் ஒட்டிப் பொருந்தாது
ஆதலின் போர்த்தாற்போல் உள்ளது  என்னும் பொருளில்‘மூசு’ என்று
உரைத்தார். உற்றுளது என்பது இடைவந்து தேர்ந்தது என்னும் பொருளில்
வந்துள்ளது.                                                   2