2405. | ‘படர் எலாம் படப் படும் பரும யானையின் திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன, குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள், கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். |
‘படல் எலாம் பட - பல வகைத் துன்பங்களும் அடைந்து; படும் - இறக்கிற; பரும யானையின் - அணி அணிந்த யானையினது; திடர் எலாம் உருட்டின- உடல்களாகிய மேடுகளையெல்லாம் உருட்டி; தேரும் ஈர்த்தன - தேர்களைஇழுத்துக்கொண்டு; குடர் எலாம் திரைத்தன - குடல்களையெல்லாம் அலைத்துத் தள்ளி; குருதி ஆறுகள் - இரத்த நதிகள்; பலவும் கடர் எலாம் மடுப்பன - பலவும் கடல் முழுவதும் பாய்ந்து கலப்பனவற்றை; காண்டி - பார்ப்பாயாக... உருட்டி, ஈர்த்து, திரைத்துக் குருதி ஆறு கடலில் மடுத்தல் காண்டி என முடிக்க. குடல்,குடர் என்றார்போலக் கடல், கடர் என நின்றது செய்யுட்போலி. ‘ஆல்’ ஈற்றசை. 31 |