2414. | ‘ “வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கு” என, நின்னை ஈன்றவள் நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். |
“வையகம் துறந்து - நிலவுலக அரசாட்சியைக் கைவிட்டு; வந்து -; அடவி வைகுதல்- காட்டில் தங்கியிருத்தல்; உனக்கு எய்தியது” - உனக்கு வந்து சேர்ந்தது; என- என்று; நின்னை ஈன்றவள் - உன்னைப் பெற்றவளாய கோசலை; நைதல் கண்டு -வருந்துதலைப் பார்த்து; உவந்தவள் - மகிழ்ச்சி அடைந்தவளாகிய; நவையின் ஓங்கிய - (பிறர்க்குத்) துன்பம் செய்வதில் உயர்ந்து விளங்கும்; கைகயன் மகள் - கைகேயி;விழுந்து அரற்ற - (பரதனை இழந்து) தரையில் விழுந்து புலம்ப; காண்டி -பார்ப்பாயாக... கூனியின் போதனை அவ்வாறு ஆதலின் ‘நைதல் கண்டு உவந்தவன்’ என்று இங்கே கூறினான்.‘ஆல்’ ஈற்றசை. 40 |