2440.‘வண்மைஇயும், மானமும்,
     மேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மைஇயும், செங்கோல்
     நெறியும், திறம்பாத
உண்மைஇயும், எல்லாம்
     உடனே கொண்டு ஏகினையே!-
தன்னைஇ தகை மதிக்கும்
     ஈந்த தனிக் குடையோய்!’

     ‘தகை மதிக்கும் - பெருமை உடைய முழு நிலவுக்கும்; தண்மை இ-
குளிர்ச்சியை; ஈந்த - கொடுத்த (கொடுக்கும்படியான); தனிக் குடையோய்!-
ஒப்பற்ற வெண்கொற்றக் குடையை உடைய தயரதனே!; வண்மைஇயும் -
கொடைத்திறத்தையும்; மானமும் - மானத்தையும்; மேல் வானவர்க்கும் -
மேல் உலகில்உள்ள தேவர்களாலும்; பேர்க்ககிலா - மாற்ற முடியாத;
திண்மைஇயும் -வலிமையையும்; செங்கோல் நெறியும் - நேர்மையான
அரசாட்சி வழியையும்; திறம்பாதஉண்மைஇயும் - என்றம் எதனாலும்
மாறுபடாத சத்தியத்தையும்; எல்லாம் - கூறப்படாதஏனைய
நல்லியல்புகளையும்; உடனே கொண்டு - உன்னுடனேயே சேர்த்து
எடுத்துக்கொண்டு; ஏகினையே - (இறந்து) சென்றுவிட்டாயே.’

     இவை அனைத்தும் இனி இவ்வுலகில் தம்மைத் தாங்குவாரைப்
பெற்றில்லையாயின என்பதாகும்.மானம் - தம் நிலையில் தாழாமையும்
தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். உயிரளபெடைகள்ஓசை இன்பம்
பயக்க வந்தன. அளபெடை இன்றியும் வரும், இவை கொச்சகக் கலி
ஆதலின்.                                                    66