தறியைமோதி முறிக்கின்ற மதயானையையொத்த, அன்ன சமீரணன் மகளை- அந்தவாயுவின்புத்திரனான வீமசேனனை, எய்தி-அடைந்து,-செறிவொடு- மனநெருக்கத்தோடு, அ காளையோடு செப்பிய - இளவெருதுபோன்ற அந்தக் கீசகனோடு சொல்லிய, யாஉம் - எல்லாவற்றையும், செப்பி-சொல்லி, பிறிது ஒரு கருத்துஉம் இன்றி - (கீசகன் இறப்பதை எப்போது காணப்போகிறோம் என்ற எண்ணத்தைத் தவிர்த்து) வேறோரெண்ணமுமில்லாமல், பெரும் பகல் - நெடிதாகத்தோன்றும் அந்தப்பகற்காலத்தை, போக்கினாள் - அரிதிற்கழித்தாள்; (எ - று.)-தாம் ஒருகாரியத்தைமுடிவுபெறக்காணும் அவாவுள்ளவர்க்கு அச் செயல் நிகழ்வதற்கு முற்பட்டகாலம் நெடிதாகத்தோன்றல் இயற்கை. (113) 62.-சூரியன் அத்தமித்துஎங்கும் இருள்சூழ, கீசகன் குறியெல்லையை நோக்கிச்செல்லுதல். எல்லையெண்டிசையும்போனவிருளெலாமீண்டுதுன்ற எல்லையின்றலைவனானவிரவியுங்குடவெற்பெய்த எல்லையில்காதலோனுமிடையிருளிடையேயந்த எல்லையைநோக்கிச்சென்றான்யமன்றிசையென்னமன்னோ. |
(இ -ள்.) எண் திசை எல்லைஉம் போன - எட்டுத்திக்கினெல்லை வரையிலும் ஒதுங்கிச்சென்ற, இருள் எலாம் - இருட்டுமுழுவதும், மீண்டுதுன்ற - மீண்டு வந்துநெருங்கவும், எல்லையின் தலைவன் ஆன இரவி- பகற்போதுக்குத் தலைவனான சூரியன், குட வெற்பு எய்தஉம்- மேற்குமலையாகிய அத்தமனபருவதத்திலே போய்ச்சேரவும். எல்லைஇல் காதலோன்உம்-(இவ்வளவு என்று) அளவிடமுடியாத காதலையுடையவனான அந்தக்கீசகனும், இடை யிருளிடைஏ - அந்தநள்ளிரவிலே, யமன் திசை என்ன - யமனிருக்குமிடம் (நாடிச்செல்வது) போல, அந்த எல்லையை நோக்கி - (வண்ணமகள் கூறிய) அந்த இடத்தை நோக்கி, சென்றான்-; (எ - று.)-மன் ஓ- ஈற்றசை. கீசகன் இப்போது செல்லும் பயணம் அவன்மரணத்துக்கே ஏதுவாதலால், 'எல்லையைநோக்கிச் சென்றான் யமன்திசையென்ன' என்று தம் குறிப்பைத் தெரிவிக்கிறார். இரண்டாமடியில், எல்லை என்பதில், ஐ-சாரியை, திரிபுஎன்னுஞ்சொல்லணிஇதிற் காண்க. இருள்-இரவுக்கு இலக்கணை. இடையிருள் - இருளிடை யென்பது முன்பின்னாகமாறிவந்தது: இலக்கணப்போலி. (114) 63.-வீமன் பெண்கோலங்கொள்ளுதல். வடுவறத்தெவ்வர்போருமன்னவனுணவுங்கையால் அடுதொழிற்குரியசெம்பொன்வரையிரண்டனையதோளான் உடுமுகத்தின்மைவானமொளியறவிருண்டகங்குல் நடுவுறப்பொழுதிற்செவ்விநவ்வியர்கோலங்கொண்டான். |
(இ -ள்.) வடு அற-குற்றம் நீங்க, தெவ்வர் போர்உம் - பகைவர் போரையும், மன்னவன் உணவுஉம் - அரசனுணவையும், கையால் - |