இப்பொழுது என் மாணாக்கனைக்கொண்டு வென்றதனால், உன் இராச்சியமுழுவதும் எனக்கு உரியதே யாய்விடினும்," சொன்ன வாய்மை நீயே சோர்ந்தா யானோ சோரேன்", "புகன்றபடி நீ யாளும் புவியும் பாதி கொள்வேன்" என்று நான் சபதங் கூறியதனால், அந்த வாக்குத்தவறாமல் ஒருபாதியையே கொண்டு மற்றப்பாதியை உனக்கே பிரித்துக் கொடுத்திடுவேன் என்பது, முன்இரண்டடியின் கருத்து. பாஞ்சாலதேசத்தில் கங்காநதியின் தெற்கிலுள்ளபகுதியைத் துருபதனுக்குக்கொடுத்து வடக்கிலுள்ள பகுதியைத் துரோணன் தனக்கு உரியதாகக் கொண்டனனென முதனூலால் அறிக. அன்று - அங்கிவேசமுனிவனிடத்துக் கல்வி கற்றகாலத்து. 'கொற்ற வாகுவீரனே '- இகழ்ச்சி. வாகு வீரவேகு எனவும் பாடம். வேறு. 83.- யாகசேனன் விடுபட்டு அவமானத்தோடு ஊர்சேர்தல். புயங்கம் பருகி யுமிழ்மதியம் போல்வான் மீண்டு பூசுரன்றன் வயங்குஞ் சுருதி வாய்மையினான் மன்னுங் குருக்கள் பதிநீங்கித் தயக்குஞ் சிலைக்கு வாள்விசயன் சயமும் பிறர்முன் றானகப்பட் டுயங்குஞ் செயலு நினைந்துநினைந் துள்ளுஞ் சுடப்போ யூர்சேர்ந்தா[ன். |
(இ-ள்.) புயங்கம்- (இராகு கேது வென்னும்) பாம்பினால், பருகி- விழுங்கி, உமிழ் -(உடனே மீண்டும்), வெளியுமிழப்பட்ட, மதியம் - சந்திரனை, போல்வான் - ஒப்பவனாய், (யாகசேனன்),- பூசுரன் தன் - துரோணாசாரியனது, வயங்கும் சுருதி வாய்மையினால் - விளங்குகிற வேதம்போன்ற தவறாத வாய்மொழியினால், மன்னும் குருக்கள் பதி நீங்கி - நிலைபெற்ற குருகுலத்தாரது நகரத்தை[அஸ்தினாபுரியை] விட்டு நீங்கி,- தயங்கும் சிலை கை வாள் விசயன் சயம்உம் - விளங்குகின்ற வில்லையேந்திய கையையும் ஒளியையுமுடைய அருச்சுனனது வெற்றியையும், பிறர் முன் தான் அகப்பட்டு உயங்கும் செயல்உம் - பிறர் முன்னியிலையே தான் (அவனிடத்து) அகப்பட்டுக்கொண்டு வருந்திய செய்கையையும், நினைந்து நினைந்து - நினைத்து நினைத்துக் கொண்டே, உள்ளம் சுட - (அந்நினைவு) தன் மனத்தைத் தபிக்க, மீண்டுபோய் ஊர் சேர்ந்தான்-;(எ-று.) அருச்சுனனாற்கட்டுண்டு பின்பு அதுநீங்கியமைபற்றி, புயங்கம் பருகி உமிழ்மதி, யாகசேனனுக்கு உவமையாயிற்று. பருகி - இங்கே 'உண்டு ' என்ற பொருளது. வில்லைக்கொண்டுவென்று வாளைக்கொண்டு அச்சுறுத்திக் கைப்பற்றியமைபற்றி, 'தயங்குஞ் சிலைக் கை வாள் விசயன் சயம் ' என்ற தென்பாருமுளர். இதுமுதற்பன்னிரண்டுகவிகள் - பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (357) 84.-துரோணனைக்கொல்ல ஒருமகனையும், அருச்சுனனை மணக்கஒருமகளையும் துருபதன் வேண்டுதல். மறுகிற்பணிலந்தவழ்பழன வளநாடுடையானெதிர்வணங்கி முறுகிப்புரிவெங்கலைக்கோட்டு முனியேபோலுமுனிவரரைத் |
|