பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்209

     என்ப - அசை. மூன்றாமடியிலுள்ள 'என்ன' என்பது - எவன் என்ற
அஃறிணைப்பொதுவினாப்பெயரின் விகாரம்: அது இங்கே எஞ்சாமை யுணர்த்தும்.
தலைமைபற்றி இளவரசைக் கூறினும் மற்றையோரையுங் குறிக்கும்.        (388)

115.-பாண்டவரும் குந்தியும் புரோசனனுடன்
வாரணாவதஞ்சென்று சிவதரிசனஞ் செய்தல்.

ஆரமார்புடை யைவருங்குந்தியும்
பூரஞான புரோசனநாமனும்
சேரவெண்பிறைச் செஞ்சடைவானவன்
வாரணாவதஞ் சென்றுவணங்கினார்.

     (இ-ள்.) ஆரம் மார்பு உடை ஐவர்உம் - மாலையையணிந்த மார்பையுடைய
பஞ்சபாண்டவரும், குந்தியும்-, பூரம் ஞானம் புரோசனன் நாமன்உம் - நிறைந்த
அறிவையுடைய புரோசனனென்னும் பெயருள்ள அம்மந்திரியும், சேர - ஒருசேர,
வெண்பிறை செம் சடை வானவன் வாரணாவதம் சென்று - வெண்மையான
கலை குறைந்த சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடைய தேவனான
சிவபிரான்  எழுந்தருளியிருக்கிற வாரணாவதநகரத்திற்போய், வணங்கினார் -
(அக்கடவுளைத்) தொழுதார்கள்; (எ-று.)

     வாரணாவதநகரத்தில் பிரசித்தமாகக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிற
சிவபிரானது திருவிழாவைத் தரிசிக்கவேண்டுமென்ற ஒருவிருப்பம்
தருமபுத்திரன்மனத்தி லுண்டாம்படி துரியோதனன் சில மந்திரிகளைக்கொண்டு
தூண்ட, அங்ஙனமே தருமன் அங்குச்செல்ல விருப்பங்கொண்டதுவே
வியாஜமாகக் திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதத்துக்குச்
செலுத்தினனென்ப. ஆரம் - பதக்கம்: சந்தனமுமாம். 'ஆரவெண்குடை'
என்றும்பாடம்.

116.-பாண்டவர் வாரணாவதத்திற் கிருகப்பிரவேசஞ்
செய்தல்.

அங்கவன்ற னருள்பெற்றமைச்சனங்கு
இங்கிதத்தொ டியற்றியநீள்கொடி
மங்குறோய்மணி மாளிகையெய்தினார்
சங்கம்விம்ம முரசந்தழங்கவே.

     (இ-ள்.) அங்கு அவன் தன் அருள் பெற்று-அவ்வாரணாவத
நகரத்திலெழுந்தருளியுள்ள அச்சிவபிரானது கருணையைப் பெற்று, அமைச்சன்
அங்கு இங்கிதத்தொடு இயற்றிய - புரோசனன் அவ்விடத்தில் (தங்களைக்
கொல்லவேண்டு மென்னும்) குறிப்போடு கட்டியமைத்துவைத்த, நீள் கொடி
மங்குல் தோய்மணி மாளிகை- உயர்ந்த துவசங்களில் மேகங்கள்படியப்பெற்ற
இரத்தினங்கள் பதித்த மாளிகையை,- சங்கம் விம்ம முரசம் தழங்க எய்தினார் -
சங்குகள் ஒலிக்கப் பேரிகைகள் ஆரவாரிக்க (ப்பாண்டவர்கள்) அடைந்தார்கள்;
(எ-று.) - அருள்பெற்றழகுற என்று பிரதிபேதம்.

117.- பாண்டவர் அங்கு அரசுவீற்றிருத்தல்.

ஆவி யன்ன வமைச்சன் மொழிப்படி
மேவி யத்திசை வேந்தர் குழாந்தொழக்