செச்சைத்தொடையிளையோனுகர் தீம்பான்மணநாறும் கச்சைப்பொருமுலையாளுறை கச்சிப்பதிகண்டான். |
(இ-ள்.) தன் இச்சைப்படி - தனது விருப்பத்தின்படியே, பேர் அறம் எண்ணான்குஉம் - சிறந்த முப்பத்திரண்டு தருமங்களையும், வளர்க்கும் - வளர்க்கின்ற, பச்சை கொடி - பசியநிறமுள்ள கொடி போன்றவளும், விடையோன் ஒருபாகம் திறைகொண்டாள் - விருஷபவாகனனாகிய சிவபிரானது (திருவுருவத்தில்) வாமபாகத்தைத் (தனக்குஉரிய) திறைப்பொருளாக [தங்குமிடமாக]க்கொண்டவளும், செச்சை தொடை - வெட்சிப்பூமாலையையுடைய, இளையோன் - இளையகுமாரனானமுருகக்கடவுள், நுகர் - அமுதுசெய்த [உண்ட], தீம்பால்-இனிய பாலினது, மணம் -வாசனை, நாறும் - பரிமளிக்கின்ற, கச்சை பொரு முலையாள் - (அணிந்த) கச்சினைமோதுகின்ற [பருத்த] தனங்களை யுடையவளுமான காமாட்சியம்மை, உறை -எழுந்தருளியிருக்குமிடமான, கச்சிபதி - காஞ்சீபுரியை, கண்டான் - அடைந்தான்;(எ-று.) கச்சிப்பதி - தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று: இது, முத்திதரும் நகரம்ஏழனுள் ஒன்றாம்; (மற்றவை - அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்தி, துவாரகை என்பன.) கச்சி - காஞ்சி என்ற வடசொல்லின்சிதைவு. ஒருகாலத்தில் திருக்கைலாசத்திலே உத்தியானவனத்தில் உமாதேவி பரமசிவனது பின்னேவந்துவிளையாட்டாக அப்பிரானுடைய திருக்கண்களைத் தனதுஇரண்டு திருக்கைகளாலும் ஒருகணப்பொழுது மறைக்க, அம்மாத்திரத்தில் சந்திரசூரியராதியர்அனைவருடையஒளிகளும் ஒழிந்துஎங்கும் இருள் மூடி யுகங்கள் பலகழிந்துமன்னுயிர்மிகவருந்த, அவ்வருத்தத்தை நெற்றிக்கண்ணின் ஒளியால் நீக்கியசிவபெருமான், பின்பு உமாதேவியை நோக்கி 'நீ செய்தஇக்குற்றந் தீரக் காஞ்சீபுரியிற்சென்று தவம்புரிந்து புனிதையாவாய்' என்று கட்டளையிட, அங்ஙனமேகன்னிகைவடிவமாய்க் காஞ்சீபுரத்திற்கு வந்த காமாட்சியம்மை, அங்கு முப்பத்திரண்டுதருமங்களையும் வளர்த்தன ளென்றும், அதற்காகச் சிவபிரான் அக்ஷயபாண்டம்ஒன்றையும், இரண்டு சராவங்களையும், இருநாழிநெல்லையும் அவட்குக்கொடுத்தருளின னென்றும் வரலாறு அறிக. முப்பத்திரண்டு தருமங்க ளாவன-கோதானம், பூமிதானம், கன்னிகாதானம், சத்திரங்கட்டுதல், குளம்வெட்டுதல்,சாலையமைத்தல், தண்ணீர்ப்பந்தல்வைத்தல், ஆவுரிஞ்சுதறி நாட்டல், மட்டங்கட்டுதல்,வீடுகட்டிக்கொடுத்தல்,பசுவுக்குப்புல்லிடுதல், விலங்குகட்டு இரைகொடுத்தல்,பறவைகட்கு இரையளித்தல், மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகவுக்கு பாலளித்தல்,மகவுக்குச்சோறளித்தல், ஓதுவார்க்குஉணவு அளித்தல், ஏழைகட்கு அன்னமிடுதல்,நோய்க்குமருந்துதருதல், விலைகொடுத்து உயிர்காத்தல், ஆடையழுக்ககற்றவண்ணாரைவைத்தல், கௌரத்திற்குநாவி தரை வைத்தல், தாம்பூலந்தருதல், அணிகலன் அளித்தல், தலைக்கு எண்ணெய்தருதல், பிறர்கடன் தீர்த்தல், பிச்சையிடுதல், அகதிப் பிணஞ்சுடுதல், ஆடையளித்தல், திண்பண்டம்நல்கல்,துயல் தீர்த்தல் என்பன; இவற்றிற்சில, வேறுவேறாகவுங் கூறப்படும். செச்சை |