பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்397

     அருச்சுனன், தீர்த்தயாத்திரைசெய்கையில் ஸௌபத்ரதீர்த்தம்,
பௌலோமதீர்த்தம், காரந்தமதீர்த்தம், அசுவமேதபலதீர்த்தம், பாரத்வாஜதீர்த்தம்
என்னும் ஐந்துபுண்ணிய தீர்த்ததங்களைக் கண்டு, அவற்றில் ஐந்து முதலைகள்
இருந்து இறங்குபவரையெல்லாங் கவர்தலால் அவை எவராலும் நீராடாது
விடப்படுகின்றன என்று அறிந்து அம்முதலைகளைத் தொலைக்கக் கருதி,
மிக்கதைரியத்தோடு அவற்றில் அகஸ்தியதீர்த்தமான ஸௌபத்திரத்தில் இறங்கி
நீராட,அதிலிருந்த பெரியமுதலை அருச்சுனனைப் பற்றிக் கொண்டது; அவன்
அதனைவிடாமல் தனதுவலிமையினால் இழுத்துக் கரையிற் சேர்த்தவளவில்,
அம்முதலை,திவ்வியசௌந்தரியமுடைய ஒரு தேவமாதாக மாறிற்று; அதுகண்டு
வியந்தஅருச்சுனன் 'நீ யார்? உன் வரலாறு என்ன?' என்றுவினாவ, அவள்
கூறுவாள்:-குபேரனுக்குப் பிரியமானவளான வர்க்கையென்னும் அப்சரப் பெண்
யான்.ஸௌரபேயீ, ஸமீசீ, புத்புதா, லதா என்ற எனது தோழியர் நால்வருடன்
யான்செல்லுகையில் மிக்க அழகுள்ள ஒரு முனிவன் பெருந்தவஞ்செய்தல் கண்டு
அத்தவத்துக்கு இடையூறு செய்யக் கருதி. நாங்களைவரும் ஆடல் பாடல் முதலிய
விநோதங்களால் அவன் மனத்தைக் கலக்கத்தொடங்கியபோது, நிலைகலங்காத
அவன் எங்களை முதலைக ளாகும்படி சபித்தான். உடனே நாங்கள் அவனையே
சரணமடைந்து எங்கள்பிழையைப் பொறுத்தருளுமாறு பிரார்த்திக்க, 'நூறுவருஷம்
கழிந்தவளவில் உங்களை ஓர் உத்தமபுருஷன் நீரினின்று கரையேற்றுவன்:
அப்பொழுது உங்கட்கு இச்சாபவடிவம் ஒழியும்' என்று சாபவிடை கூறியருளினான்:
அதுமுதல் நாங்கள் முதலைகளாய் இந்தஐந்து தீர்த்தங்களிலும் வசிக்கிறோம்.
என்னைப்போலவே மற்றைநால்வரையும் நீ சாபந்தவிர்த்தருளுக' என்றுகூற,
அருச்சுனன் அங்ஙனமே மற்றையதீர்த்தங்களிலும் இறங்கி அம்முதலைகளையும்
இழுத்து வெளியேவிட, அவையும் தேவமாதர்களாய்ச் சென்றன. பின்பு அனைவரும்
அச்சமின்றி அத்தீர்த்தங்களில் இறங்கி நீராடலாயினர் என்றவரலாற்றின் விவரத்தை
முதனூலால் அறிக. இந்தவரலாற்றுவிஷயம் பாலபாரதத்திற் குறிக்கப்பட்டிலது.
தவவேள்விகள்செய்வார்க்குப் பெரும்பாலும் இடையூறுசெய்விப்பவன்
இந்திரனாதலால், அவன் கட்டளையால் அவர்கள் அம்முனிவனது தவத்துக்கு
இடையூறுசெய்கையிற்சாபம்நேர்ந்த தென்றுகொண்டு, 'இந்திரன்வெஞ் சாபம்'
எனப்பட்ட தென்க. அன்றி,இந்திரனென்பது தலைவனென்றபொருளில்வருதலால்,
இங்கு முநீந்திரன் அதாவதுமுனிவர்தலைவன் என்றுகொள்ளுதல் பொருந்தும்.

     சந்திரனுக்கும் இராகுகேதுக்களாகிய பாம்புகளுக்கும்பகைமை யுள்ளதனால்,
அப்படிப்பட்ட பகைமை இங்கு இல்லையென்பது தோன்ற, 'திங்களுடன் அரவு
உறவுசெய்யும் வேணி' என்றார். கொந்து=கொத்து:மெலித்தல். கோகர்ணம் -
துளுவநாட்டிலுள்ள சிவதலம். இராவணன் தவஞ்செய்து தனது இலங்கை அழியா
திருத்தற்பொருட்டு அங்குத் தாபித்துப் பூசித்தற்காகப் பெற்றுச் சென்றசிவலிங்கம்,
விநாயகமூர்த்தியைக்கொண்டு தேவர்கள்செய்த சூழ்ச்சியால் இடையில் தங்கி,
இராவணன் இருபதுகைகளாலும்