பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்423

                                        வோட,
உலைக்கனலிற்கருங்கொல்லன்சிறுகுறட்டாற்கடுபுரிந்தொதுக்
                                      கிமாரன்,
கொலைக்கணைகள்சமைப்பனபோற்குயிலலகாற்பல்லவங்கள்
                                   கோதுமாலோ.

     (இ-ள்.) கலக்கம்உற - கலக்கம் மிகுதியாக உண்டக, இளவேனில் கலகம்
எழுந்திடும் - வசந்தகாலத்துக்குஉரிய போர் மூளுதற்கு இடமான, பசுந் தண் காவு
தோறுஉம் - பசுமையானகுளிர்ந்த சோலைகளிலெல்லாம்,- சிலைக்கு அணி நாண்
முறுக்குவ போல் - (மன்மதனுடைய) வில்லுக்கு அழகிய நாணியை முறுக்குதல்
போல,சுழல் அளிகள் தென்றலின் பின் சேர ஓட - சுழலுந்தன்மையனவான
வண்டுகள்தென்றற்காற்றின்பின்னே ஒரு சேர ஓட, - கரு கொல்லன் -
கருநிறமுடையகொல்லனானவன், உலை கனலில் - உலைக்களத்துள்ள
நெருப்பில், தகடு புரிந்து -தகடுகளைச் செய்து, (அவற்றை) சிறு குறட்டால்
ஒதுக்கி - சிறிய குறடுஎன்னுங்கருவியினால் ஒதுக்கி, மாரன் கொலை கணகள்
சமைப்பன போல் -மன்மதனுக்குஉரிய கொலைத்தொழிலைச்செய்யும் அம்புகளைச்
செய்தல்போல, குயில் -குயில்கள், அலகால் - (தம்) வாயலகினால், பல்லவங்கள்
- தளிர்களை, கோதும்-; (எ-று.)

     இங்ஙனங் காமனோடு நண்புகொண்ட வசந்தகாலத்துக்கு உரிய போராவது -
அக்காலத்தில் மன்மதன் ஸ்திரீபுருஷர்களைச் சிற்றின்பவசப்படுமாறு தூண்டுதல்.
அதற்கு இடமான சோலை யென்றது - மைந்தரும் மகளிருங் காதல்கொண்டு
கூடிவிளையாடுதற்கு ஏற்ற ரமணீயமான சோலை யென்றவாறாம். அச்சோலைகளில்
வசந்தகாலத்திலே நறுமணமளாவி உலாவுகிற தென்றலின் பின்னே அதனை
நுகர்தற்குச்சுழலுமியல்போடுசெல்லுகிற கருநிறமான வண்டுகளின் ஒழுங்கை,
மன்மதனதுவில்லின்நாணியாதற்கு முறுக்கியகயிறு போன்ற தென்றார். மன்மதனது
கரும்பு வில்லுக்குவண்டொழுங்கு நாணி யெனப்படுதலை "ஆலைக் கரும்பு சிலை
ஐங்கணை பூ நாண்சுரும்பு" என்ற இரத்தினச்சுருக்கத்தாலும் அறிக. 'கலக்கம் உற'
என்றது -ஸ்திரீபுருஷர்களுடைய மனத்திட்டம் நிலைகுலைய என்றபடி.
பின்னிரண்டடியில்கருநிறமுடைய குயிலுக்கு - கருங்கொல்லனும், அதன்
அலகுக்கு - சிறு குறடும்,தளிராற்செம்மைபெற்ற மரச்செறிவுக்கு - உலைக்கனலும்,
விரிந்த தளிர்க்கு - பரந்ததகடும், அலகினால் அதனைச் சுருட்டிக் கோதுதற்கு -
குறட்டினால் தகட்டை ஒதுக்கிஅம்புவடிவாக அமைத்தலும் ஒப்புஆம்;
தற்குறிப்பேற்றவணி. இங்ஙனம் கசி தன்மனோபாவத்தால் அமைத்துக்கூறுவதை
உவமையணி யென்னலாகாது.வணிடினொழுங்கும், குயிலும் தளிரும் தம்மைக்
காண்பவர்க்கு வேட்கை விளைக்குங்காமோத்தீபகப்பொருள்களாதலால், இங்ஙனங்
கூறப்பட்டன.                                                   (723)

3.- மன்மத னுலாவல்.

செங்காவிசெங்கமலஞ்சேதாம்ப றடந்தொறுமுத் தீக்களாகப்
பைங்காவினெடுஞ்சினைக்கைமலர்நறுந்தே னாகுதிகள்பலவும்வீழ்த்த
உங்காரமதுகரங்களோங்காரச் சுருதியெடுத்தோதவேள்வி
வெங்காமனிரதியுடன்புரிந்துதன தென்றலந்தேர்மேற்கொண்டானே.