இடிம்பை- வீமனை விரும்பியவளும் இடிம்பனது உடன்பிறந்தாளு மாகிய அரக்கி, வேத் -4,9. வீமன் இவளைத்தாயின் மொழியால் மணந்தான், வேத் -24: இவள் கடோற்கசனைப்பெற்றாள், வேத் -30 இந்திரசேனை- மௌற்கலிய முனி வனுக்குப் பத்தினியான நாளாயணி, குன்று முதலிய வடிவு கொண்ட அவனோடு நதிமுதலி யனவாகிப் போகந்துய்த்து மறு பிறப்பில் இந்தப் பேரைக் கொண்டவளானாள், திரௌ -73, 78, 79: இவளே திரௌபதியாய் வந்தாள், திரௌ - 87. இந்திரப்பிரத்தம்- காண்டவப் பிரத்தம்விசுவகன்மாவினால் நகரமாக அமைக்கப்பட்டபோது அவ்விடத்திற்கு இட்ட பெயராகும், இந் - 9, 10,14. இந்திரன்- அருச்சுனனைக் குந்தியிடம் பெற்றவன், சம் -83: காண்ட வப்பிரத்தத்தை இந்திரப்பிரத்தமாக விச்சுவகன்மனைக்கொண்டு செய்வித்தவன், இந்-7,10: சுபத்திரையின் மணத்துக்கு இந்தி ராணியோடுவந்தான், அருச் -74, காண்டவவனத்தை அக்கினி தேவனுக்கு அருச்சுனன் உணவாகக் கொடுக்கையில் அவனையெதிர் த்தவன், காண்-63, 64: இவன் பெயர்ப் பரியாயம்: சதமகன். காண்-32,சுரபதி,காண்-44: வாசவன்,குரு-27,83: புரந்தரன், காண் -48: பாகசாதனன், காண் -45:வலாரி, காண்-47, மகவான், வார -60; புருகூதன், காண் - 25: குன்றச் சிறகரிந்தோன், காண் -25: முகிலூர்தி, காண் - 30 [41 இராதை- அதிரதன் மனைவி, சம் - கர்ணனை வளர்த்தவள், சம் -42. இராவான்-அருச்சுனனுக்கு உலூபி யென்னும் நாககன்னிகையிடம் பிறந்தவன், அருச் - 9. | இளை- இளன் என்னும் மநுபுதல் வன் அம்பிகையிட்ட விதியறி யாமையாற் பெண்ணாகி இப் பெயர் பெற்றனன், குரு -7; புதனைக்கூடிப் புரூரவாவை ஈன்றவள், குரு -9. உத்கசம்- தௌமியமுனிவன் வசித்த துறை, திரௌ -9. உதிட்டிரன்- யுதிஷ்டிரன் : தரும புத்திரனைப் பார்க்க, சம் - 68 உபயாசன்- துருபதனுக்காகப் புத் திரகாம வேள்வி செய்தவன், வார - 85: துருபதன் தேவி தீண்டாளாக, ஓமப்பொருண்மிச்சிலை அக்கினியில்ஓமஞ்செய்து திருட்டத்துய்மனைத் தோற்றுவித்தவன், வார - 86:திரௌபதியையும் அங்ஙனே தோற்றுவித்தான், வார - 90 உருப்பசி- திருமாலின் தொடையி னின்று தோன்றிய உருவிற் சிறந்த ஓர் தேவமாது, குரு - 13: அசுரர்களாற் கவரப்பட்டபோது தன்னை மீட்டபுரூரவாவை மணந்துஆயுவைப்பெற்றவள், குரு-13 உலூபி- அருச்சுனன் மணந்த நாக கன்னிகை அருச் -8. ஏகசக்கரவனம்- வேத்திரகீயத் தைச் சேர்ந்தது, வேத் - 63. ஏகலவ்யன்- வேடன் துரோணன் சீடன், வின்மையுடையான்; அருச்சுனனைத் திருப்திசெய்ய அவனுடைய கட்டைவிரலை துரோணர் குருதட்சிணையாக வாங்கினார், வார - 50 கங்கையாள்- சாபத்தினால் மானுட மகளாய்த் தோன்றிச் சந்தனுவை மணந்தாள், குரு - 60, 46: தான் ஈன்ற ஏழுசிசுக்களைக் கங்கையிலெறிந்தாள், குரு - 47, 49:சந்தனுவை மணந்து அட்ட வசுக்களைத் தோற்றுவித்தாள், குரு - 73; இறுதியிற்பெற்ற புதல்வனுடன் சந்தனுவைப் பிரிந்தாள், குரு - 78 |