கடோற்கசன்- வீமனுக்கு இடிம்பி யென்னும் அரக்கியினிடம் பிறந்த குமாரன், வேத் -30 களிந்தாநதி - யமுனை, அருச் -11 கன்னன்- குந்தியின்மகன், சம் - 64: இந்திராதிய ரிரந்தன தரத்தக்க வன், சம் - 38: கவசகுண்டலங் களுடன் பிறந்தவன், சம் - 39. நதியில் விடப்பட்ட இவனை அதிரதனெடுத்து வளர்த்தான்: இவன் கதிரவன் தரு புதல்வன்: பரசுராமனிடம் படைக்கலப் பயிற்சி செய்தான், சம்-42: அரங்கத்தில் அருச்சுனனினும் வின்மையில் விஞ்சியவன், வார - 62: அங்கதேசாதிபதி யாயினான், வார -70: துரியோதனனுக்கு உற்றதுணை, வார - 102:உண்மை முதலியவற்றி வொப்பற்றவன், திரௌ - 39. கன்னித்துறை,அருச் - 47 காஞ்சீபுரம்,அருச் - 13. காண்டவப்பிரத்தம்,இந் -8 காந்தாரி- சுபல மகள், சம்71,81: வடமீனனையாள், சம் -23: கணவன் விழியிலானென்று அறிந்து பிறரெவரையும் பாராதவாறு பட்டத்தினால் கண்ணை மறைத்துக்கொண்டாள்; திருதராட் டிரனோடு விவாகஞ் செய்வித்தார், சம் - 24: வியாசனருளால் நூறுமகவான கருப்ப மெய்தினள், சம் -58; குந்திபுதல் வனைப் பயந்தமை கேட்டுப் பொறாமையால் உதரமுட் குழம்புமாறு மோதியவள், சம் - 70. வியாதன் அந்தக் கருப்ப கோசத்தசையினைத் தாழியிலிழு திலிட்டுவைத்தல், சம் -72; சுயோதனன் முதலியோர் தோன்றுதல், சம் - 78, 80. - சாபத்தால் அரமகள் மீன் வடிவெய்தி வசுவின் வீரியத்தை விழுங்க அம்மீன்வயிற்றுப் பிறந்தவள், குரு -105: தாசபூபதியால் | வளர்க்கப்பட்டவளும் வியாசனுடைய தாயுமாகிய இவளைச்சந்த னுவுக்குவீடுமன்மணஞ்செய்வித் தான்;குரு-100: சம்-6,7: தன் மேனி யோசனை தூரம் மணம் வீசப்பெற்றவள், குரு -91: இன்னும் இவளைப்பற்றியன யோஜந கந்தி என்ற இவள் பெயர் காட்டுமிடத்துக் கூறப்படும். கிந்தமன்- மானுருவங்கொண்ட மனைவியோடு அம்மானுருவங் கொண்டே புணர்கையில் பாண்டுமன்னவன் கணையால் தாக்கப்பட்டு உயிரொடுங்கிய ஓர் முனிவன்: பாண்டுவுக்குச் சாபமளித்தவன், சம் - 49,51 - சேதிமரபினனாயவசுவென் பவனுக்கு மனைவி, குரு -104. கிருபன்- கோதமன்பேரன், வார-29, பாண்டவரின் வில்லாசிரியன், வார - 30,மூத்திருந்தான், வார -66 கிருபி- கிருபற்கிளையாள், துரோணன் மனைவி, வார - 41; அசுவத் தாமனை வளர்த்தாள், வார - 42. கிருஷ்ணன்- வசுதேவகுமாரன்: பூபாரந்தீர்க்கப் பிறந்தவன், சம் - 111: யதுகுலத்துக்குத் திலகம்: மாமனுயிர் முடித்தான்; கற்பகச் சோலையைப் பூமியிற் கொணர்ந்தான், திரௌ -41: அருச்சுனனுக்குச் சகாயன், திரௌ - 49: இந் -8. அருச்-73,64, 85, 90: காண் -13, குந்தி- பிரதையைப்பார்க்க. [19. குந்திபோசன்- பிரதையைவளர்த்த தந்தை, சம் -25 குரு- சந்திரகுலத்து மிகு சிறப் புடையரசன், குரு -31, 32. கூடல்- தமிழேடு எதிரேறிய வைகைத்துறையை யுடையது, அருச் - 20 கோதமகன்- கிருபனுக்குத் தந்தையான சரத்துவந்தனுக்குத் தந்தை, வார - 29. கோகர்ணம்- சிவக்ஷேத்திரம்,அருச் -48 |