பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி502

சகுனி- காந்தாரத்தலைவன், திரௌ
 -37: சூதில்வல்லவன்:
 துரியோதனனுக்கு உற்றதுணை, வார
  -102.
சதசிருங்கம்- ஒருமலை: பாண்டு
  மரித்ததும், இம்மலையிலிருந்த
  காசிபன் முதலியோர் பாண்ட
  வரை அரச நகரிற்சேர்த்தனர்,
  சம் - 107.
சந்திரன்- திருமாலின் மனத்தினின்று
  தோன்றியவன், குரு-1:
   நட்சத்திரங்களை நாடொறும்
   புணர்பவன், தேவர்கட்கு அமு
   தளிப்பவன், சிவன் முடியிலிருப்
   பவன், குரு - 2: பூமியைக்குளிரச்
   செய்பவன், குரு -3: பாற்கடல்
   கடைந்த காலத்து அடைதூணாயினான்,
   பாற்கடலில் தோன்றினான்,குரு - 4:  
   பதினாறுகலைகளையுடையவன், 
   அத்திரிமுனிவர் விழியினில்
   தோன்றியவன், குரு-5. 
   புதனுக்குத்தந்தை, குரு-6
சந்தனு - சந்திரகுலத்தவனான
  ஓரரசன், குரு -33: வருணன் பிரம
  சாபத்தினால் இம்மன்னனாகப்
  பிறந்தான், குரு -59, 69, 72: கங்
  கையாளை மணந்தவன், குரு -46,
  கங்கையின் புதல்வனான வீடு
  மனால் தாசபூபதி வளர்த்த
  காளியை மணந்தான், குரு - 107.
சராசந்தன்- மகததேசத்தரசன்:
  க்ருஷ்ணனை வடமதுரையி
  னின்று துவாரகை சேருமாறு
  செய்தவன், திரௌ - 48, 52.
சல்லியன்- மத்திரநாட்டரசனான
  வீரன், திரௌ - 45, 51.
சன்மிட்டை- வ்ருஷபர்வன் மகள்,
  தேவயானைக்குப் பாங்கியா
  யிருந்து பின் பணிப்பெண்ணானவள்,
  குரு-18: யயாதியால் காந்தருவ
  மணஞ்செய்யப்பட்டவள்,
  குரு-19: பூருவைப் பெற்றவள்,
  குரு-20: பின்னும் (த்ருஹ்யு அனு 
  என்ற) இருவரை ஈன்றாள்,
  குரு -21

சாத்தகி- க்ருஷ்ணனுக்கு இளவல்:
  போசகுலத்தலைவன், திரௌ -42
சாதேவன்- ஸகதேவன்: மாத்திரி,
   குமாரன், நகுலனது தம்பி,
   சம் - 86, 87
சாலிகோத்திரமுனிவனம்- பாண்ட
   வர்வேத்திரகீயமடையுமுன் தங்
   கிய இடம், வேத - 26
சாலுவன்- வீடுமனோடுஅரசர்செய்த
   சமரில் வீரத்தாற்சிறிது முந்திய
   மன்னவன், குரு-127: அம்பையை
   மணமறுத்தவன், குரு -129
சிகண்டி- அம்பைதவஞ்செய்து
   யாகசேனனிடஞ் சேர்ந்தபோது
   பெற்ற பெயர், குரு -146.
சிசுபாலன்- சேதிபதி: கண்ணனைப்
   பழித்தலையே தனக்கு
   வலிமையென நினைப்பவன்,
   திரௌ - 42
சித்திரரதன்- கங்கைக் கரையில்
   ஜலக்கீரிடை செய்துகொண்டு
   அருச்சுனனொடுபொருது பிறகு
   நண்பாய்த் திரௌபதியின்சுயம்
   வரத்துக்குச் செல்லும்
   பாண்டவர்க்கு வழிமுதலிய
   காட்டியவன், திரௌ -8
சித்திரவாகனன்- மகப்பெறாது
   தவம் புரிந்து சித்திராங்கதை
   யைப்பெற்ற பாண்டியன்:
   அருச்சுனனுக்குத்
   தன்மகளையீந்து
   அவன் தன் மகளிடத்துப்
  பெற்ற புதல்வனைத் தான்தத்து
  மகனாகக் கொண்டவன்,
  அருச் -26
சித்திராங்கதன்- சந்தனுவுக்குக்
   காளியினிடம் பிறந்தவன், குரு-
   111, 112: வீடுமனால்
   அரசனாயினன், குரு 113:
   சித்திராங்கதனென்னும்
   கந்தருவனாற் கொல்லப்பட்டான்,
   குரு - 114.
சித்திராங்கதன் ஒரு கந்தருவன்:
  சித்திராங்கத மன்னனைக்
  கொன்றவன், குரு -114.
சித்திராங்கதை- சித்திரவாகன
   பாண்டியன்புதல்வி, அருச் -26:
   அருச்சுனனை மணந்தாள்,
   அருச்-