யான், மன்மதி யாதும்மதிக்காதவன், வார-98: சிறுபருவத்திலேயே பாண்டவருடன் தெம்முறை யாயினன், வார-106: புறத்தில் நட்பாக நடித்து அகத்து வேர்ப்பவன், வார- 135 வலம்புரித்தார் வேந்து, திரௌ-52: அரவக் கொடியுயர்த்தோன், திரௌ -54. துருபதன்-யாகசேனனைப் பார்க்க, திரௌ-1 துருவாசமுனி-தந்தை மொழிப்படி பணிவிடை செய்தகுந்திக்கு மன முவந்து மகப்பேறளிக்கும் மந்திர முரைத்தவன், சம்- 26,29. துரோணன்பாரத்துவாசன் மேன கையைக் காமுறப்பிறந்தவர், வரா-34: துரோண கும்பத்தில் தோன்றியவர், வார-69. 93: ஏழுநாளில் பரசுராமனிடம்படைகளிற் பயின்று தேர்ந்தவர், வார-33: அங்கிவேசனிடமும் படைகள் கற்றவர், வார-38: கிருபியை மணந்தவர், வார- 41, வாய்மை சோராதவர், வார- 44: சுகன்நிகர் ஞானம் பெற்றவர்: வார-45: பூமகற்கு மிக்கமாமுனிவர், வார78: துருபதனுக்குப் பாதியரசும் உயிரும் வாழ்வும் உதவினவர், வார-82: சுருதி வாய்மையினர், வார-83: தன்னைக்கொல்லப் பிறந்த திட்டத் துய்மனுக்கும் வில்லித்தைபயிற்றியவர், அந்தக்காணமறுவற் றிலங்குந்திறலோர், வார-93. துவாரகை-வடமதுரையைவிட்டுக் க்ருஷ்ணண்யாதவருடன்சேர்ந்த நகரம், திரௌ-43, துவரை யென வழங்கும், திரௌ 49. 53. தென்மதுரை- பாண்டியராசன் நகர், அருச்-21. தேவயானை- சுக்கிராசாரியரின் மகள், யயாதியை மணந்து(யது, துருவசு) என்ற இருகுமரரரைப் | பெற்றவள், குரு - 17: சன்மிட் டையை முதலில் உயிர்ப்பாங்கி யாகவும் பின் பணிப்பெண்ணாக வும் உடையவள், குரு -18: கண வனைச்சீறித்தந்தையிடஞ் சார்ந்தவள், குரு -21: தௌமியமுனிவன்- உத்கசதீரத்தி ருந்த முனிவன்: சித்திராதன் சொற்படியே இவனைத் துணை யாகக்கொண்டு பாண்டவர் திரௌபதி சுயம்வரத்துக்குச் சென்றார்கள், திரௌ - 9, 93. நகுடன்- ஆயுவின்மைந்தன், பற் றற்றுநின்று தவஞ்செய்து சத மகம் புரிந்து தேவேந்திரபதவி பெற்றவன், குரு-14: அகத்திய சாபத்தாற்சர்ப்பமானவன், குரு -15: யயாதியின் தந்தை, குரு-16. நகுலம்-மாத்திரியின் குமாரன், சம்-86: சகதேவனுக்கு மூத்தோன், சம்-87. நாரதன்- சுந்தோபசுந்தர்சரிதை சொல்லித் திரௌபதியின் சம் பந்தமாக நியமம் ஏற்படுத்திச் சென்றவன், இந் - 42, 45. நாளாயணி- மௌத்கலியமுனிவனால் பரிசோதிக்கப்பட்டு மனைவியாகி இன்பறுகர்ந்தாள்; இவளே திரௌபதி யானாள்; திரௌ - 73. நீலன்- திரௌபதி சுயம்வரத்துக்கு வந்திருந்தவலிமையுள்ள ஓரரசன், திரௌ - 45, 52. பகதத்தன்- யானைப் போர்வீரன், திரௌ - 44: திரௌபதிசுயம் வரத்துக்குவந்தவன் - 51. பகன்- வேத்திரகீயத்திருந்த அரக்கன், வேத் - 39: வீமனாற் கொல்லப்பட்டான், வேத் - 62 பப்புருவாகனன்- அருச்சுனனுக்குச் சித்திராங்கதையிடம் பிறந்த குமாரன், அருச் - 43 பரசுராமன்- பூந்துழாய்மாலைப் போர் மழுப்படையோன், வீடும |