னுக்கு வில்லாசிரியன், குரு- 87, 135, 136, 137: கார்த்த வீரியனது ஆயிரம் புயங்களையும் துண்டித்தவன், குரு-140: அமரில் வீடுமனுக்கு உடைந்து ஓடினவன், குரு-142, 143. பரதன்-பூருவின்குலத்தவன், குரு- 26: அசுரரைவென்று சுரரைத் தேவலோகத்தில் நிலைநாட்டிய வன், குரு-27: மிகுசிறப்பினன், குரு-27. பராசரன்-மச்சகந்தியை யோசன கந்தியாக்கினவன், சம்-6: அவளுடன் கூடி வியாசனைத் தோற்றுவித்தவன், சம்-7. பலராமன்-க்ருஷ்ணனுக்குமூத்தவன்: யமுனையையலத்தாற்பிளந்தான், திரௌ-40: வசுதேவ குமாரன்: அலாயுதன், திரௌ- 49: தாலத்துவசன், அருச்-85: வெண்ணிறமதியமன்னவிடலை, சம்-113, திரௌ-84, 86. பாண்டவர்- பாண்டுபுத்திரரான இவர் பஞ்சேந்திரரின் அமிச மானவர், திரௌ-85,86. பாண்டு-வியாசனருளால்அம்பாலி கையினிடம் பிறந்தான், வெண் ணிறத்தினன், சம்15,16,17,22: திறலோன், சம்-17: சேனாபதி யானன், சம்-22: குந்தியையும், (சம்-44) மாத்திரியையும் (சம்-45) மணந்தவன்: கிந்தமனிடம் சாபம்பெற்றவன், சம்-51: தவம் பூண்டான், சம்-53: ஞானமுனியாயினான், சம்-54. சாபப்படி உயிரிழந்தான், சம்- 99 பிரதை-சூரன்மகள்,சம்-25: யது குலத்தாள், வேத்-45, சம்-85, யாதவி எனப்படுவள், சம்-85: குந்தி போசனில்லம் வந்தவள், சம்-25: கன்னனைக் கன்னிகை யாயிருக்கும் போதே ஈன்றவள், சம்6-4: சூரியனருளினால் அம் மகவை ஈன்று மீண்டும் கன்னிகையானவள், சம்-9, 39: பது | மினிசாதிப்பெண், சம்-32: பாண் டுவைமணந்தவள்,சம்-44: தரும புத்திரனையும், (சம்-67) வீமனை யும், (சம்-76) அருச்சுனனையும் (சம்-83) ஈன்றவள்; மகப்பேறு மந்திரத்தை மாத்திரிக்கு உரைத்தவள், சம்-85. புதன்-சந்திரன்புதல்வன், குரு-6: இளையைக்கூடிய புரூவாவைத் தோற்றுவித்தான், குரு-9. புரூரவா - புதனுக்கும் இளைக்கும் புதல்வன், குரு-9: அசுரர்கவர்ந்த உருப்பசியை மீட்டு இந்திரன் தூதினாற் பூமியில் அவளை மணந்து ஆயுவைத்தோற்றுவித் தான், குரு-10,13. புரோசனன்- திருதராட்டிரனுக்கு உயிரன்ன அமைச்சன், வார - 110: புன்மதியோன், திரௌ - 105:பொறுமையிலாதவன், வார-107: தருமனுக்கு மந்திரி யாயிருந்தவன், வார - 113. வஞ்சனையொழுக்கமுடையவன், வார-119; அரக்குமாளிகையெரி யில் இறந்தான், வார-133. பூரு-யயாதிக்கும்சன்மிட்டைக்கும் மகன், குரு-20: தந்தைக்குத்தன் இளமையீந்தவன், குரு-23; மீண்டிளமையும் அரசும் பெற்றவன், குரு-24, 25. பொருநைப்பாவநாசத்துறை-தீர்த் தகட்டம், அரு -45. மயன்-காண்டவவனத்திலிருந்த அசுரத்தச்சன்; அருச்சுனனரு ளாலுயிருய்ந்தான்; காண்-74. மாத்திரி-மத்திரராசன்மகள், சம்-46; பாண்டுவை மணர்ந்தவள், சம்-45: நகுலசகதேவரைப் பயந்தவள், சம்-86. கணவனுடன் சிதையளவிற்குளித்து உயிர் நீத்தாள், சம் - 105. மீனவன்-வசுவென்பானதுவீரி யத்தையுண்ட மீன்வயிற்றுதித்த பாலகன்: காளிக்கு உடன் பிறந்தவன், குரு -105, 106. |