பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 408

 தில், சுரர்தினம் ஈர் ஆறு-தேவர்களுடைய பன்னிரண்டு நாள் [பன்னிரண்டு
வருஷகாலம்], துன்னுதிர் -வசிப்பீர்களாக: (பின்பு), மன்னும் நாட்டின் -
(பலவகை வளங்களும்) பொருந்தியநாட்டிலே,ஒருவரும் அறியாவண்ணம் -
ஒருத்தர்க்கும் தெரியாதபடி, ஒரு தினம் - ஒருநாள் [ஒரு
வருஷகாலம்],உறைதிர்-வசிப்பீர்களாக; பின் உற - (இவ்வாறு பதின்மூன்று
வருஷமும்) கழித்தபிறகு,உங்கள்-உங்களுடைய, பெரு விறல் அரசும்-மிக்க
பராக்கிரமத்துடனாளப்படுகிற இராச்சியத்தையும்,வாழ்வும்-செல்வ
வாழ்க்கையையும், பெறுதிர்-பெற்றுக் கொள்வீர்களாக, என்றான்-
என்றுவிவரித்துக் கூறினான், (துரோணன்); (எ - று.)

    துரோணன், கீழ்ச்செய்யுளில் 'உங்களுலகினையிழந்து சின்னாள் வரை
செறிகானில் வைகிவருவதேவழக்கு' எனக் கூறியதை இச்செய்யுளால்
விவரித்துக் கூறுகின்றான். தவணை கூறும்பொழுது'பன்னிரண்டு வருஷம்
வனவாசமும் ஒரு வருஷமும் அஜ்ஞாத வாசமுஞ் செய்துவந்தால், பிறகு
இராச்சியத்தையும் செல்வத்தையும் பெறலாம்' என்று கூறினால், கேட்பதற்கு
அஞ்சத்தக்கதாகஇருக்குமென்று கருதி, அங்ஙனங்கூறாமல் 'இப்பொழுது
நீங்கள் வனவாசஞ் செய்யவேண்டியதுதேவமானத்தாற் பன்னிரண்டு தினமும்,
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியது தேவமானத்தால் ஒரு தினமுமே:
நெடுங்காலமல்ல' எனப் பாண்டவர்கட்கு தேறுதலுண்டாகுமாறு
திருதராஷ்டிரன் கருத்தின்படியேகூறினனென்க.  மனிதர்க்கு ஒருவருஷம்
தேவர்கட்கு ஒருதினமா மென்பது நூற்றுணிபு.  அரிவை-பெண்; இங்கே,
திரௌபதி.  நீவிர் ஐவரும்-முன்னிலையிற் படர்க்கை வந்த
இடவழுவமைதி: 'நீவிரைவிரும்' என்றிருப்பின், வழாநிலையாம்.  துன்னுதிர்,
உறைதிர், பெறுதிர் -ஏவற்பன்மைமுற்றுக்கள்.  அடவீ, ஸு ரர்,திநம் -
வடசொற்கள்.                                             (429)

277.-வீடுமன் முதலியோர்அவ்வார்த்தைக்கு உடன்பட்டுக் கூறுதல்.

மறைந்துறை நாளி னும்மைமற்றுளோ ரீண்டு ளாரென்று
அறிந்திடின் மீண்டு மிவ்வாறரணிய மடைதி ரென்றான்
பிறந்தவிம் மாற்றங்கேட்டுப் பிதாமகன் முதலா யுள்ளோர்
சிறந்ததொன் றிதனி னில்லையிசைந்ததே செய்ம்மி னென்றார்.

     (இ -ள்.) (பின்னும்), 'மறைந்து உறை நாளின்-(நீங்கள்) மறைந்து வசிக்கிற
[அஜ்ஞாதவாச] காலத்தில், நும்மை-உங்களை, மற்று உளோர்-பிறர், ஈண்டு
உளார் என்று அறிந்திடின்-இங்கேயிருக்கிறார்களென்று (நிச்சயமாக)
அறிந்துவிட்டால், மீண்டும்-மறுபடியும், இஆறு அரணியம் அடைதிர்-இந்தப்
பிரகாரமே காட்டுக்குப் போகக்கடவீர்கள்,'என்றான்-என்றுங்கூறினான்
(துரோணன்):  பிறந்த-(துரோணன் வாயினின்று) வந்த, இமாற்றம்-இந்த
வார்த்தையை, பிதாமகன் முதல் ஆய் உள்ளோர் கேட்டு,-(பாண்டவர்கட்குப்)
பெரியபாட்டனான பீஷ்மன் முதலியோர் கேட்டுணர்ந்து, இதனின் சிறந்தது
ஒன்று இல்லை - இவ்வாறுசெய்வதனினும்
சிறந்த செயலொன்றுமில்லை;  இசைந்ததே