அடிமையாகிய பாண்டவர்கள் தமது தலைவரிடத்தில் பணிவிடை செய்வதே முறைமையாகுமாதலாலும், திருதராஷ்டிரராசனதுகட்டளைப்படியே அடிமையாகிய பாண்டவர்கள் வனத்திற்குச் சென்றாலும் குறித்தகாலங்கழித்து மீண்டுவந்தபோது அடிமையாகிய உங்கட்குச் செல்வத்தில் உரிமையில்லை: உங்கட்குத் தலைவர்களானஎங்களிடத்து அடிமை செய்துகொண்டிருப்பதே உங்கள் கடமையாகுமன்றி, நீங்கள் இராச்சியம் முதலியசெல்வ வாழ்க்கைகளைப் பெற விரகில்லை; நாங்கள் சம்மதித்து உங்களை அடிமையாதலினின்றும்விடுவிக்க வில்லையே! எனத் துரியோதனாதியர் கூறுவர்களாதலாலும், திரௌபதி தங்களைஅடிமையினின்று நீக்குமாறு சூதாடவேண்டுமெனக் கூறினளென்க. யுதிஷ்டிரனுக்குப்ரதிவிந்த்யனென்பவனும், வீமசேனனுக்கு ஸு தஸோமனென்பவனும், அருச்சுனனுக்கு ஸ்ருதகீர்த்தியென்பவனும், நகுலனுக்கு ஸதாநீகனென்பவனும், சகாதேவனுக்கு ஸ்ருதஸேநனென்பவனுமெனத்திரௌபதியினிடத்தில் ஐவர்க்கும் ஐந்துமக்கள் தோன்றினர்; இவர்கள்உபபாண்டவரெனப்படுவர். 'எனது மைந்தரைவர்' என்றது, மற்றும் சுபத்திரை முதலியோரிடத்துப்பிறந்திருந்த அபிமந்யு முதலியவரையும் உபலட்சணத்தாற் குறிக்குமென்னலாம். மூன்றிழை சேர்த்துஓரிழையானது மூன்றுகொண்டது ஒரு வடமாக, அங்ஙனம் மூன்று வடங்கொண்டு பூணூல் செய்யப்படுவதனால், அது'முந்நூல்' என்றும், 'முப்புரிநூல்' என்றும் சொல்லப்படும். ஸ்ருதி, வரபதி - வடசொற்கள். (431) 279.-திரௌபதி கூறியபடி தருமன்மறுசூதாட மன்னவர் காணுதல். தையலங் குரைத்த மாற்றந் தருமனுங்கேட்டு நாங்கள் கையறு தொண்ட ராகிக்கான்புகல் வழக்கு மன்றால் ஐயுறா தொருகா லின்ன மாடுதுமருஞ்சூ தென்றான் மெய்யுற விருந்த வேந்தர்மீளவுங் காண லுற்றார். |
(இ -ள்.) தருமனும் - தருமபுத்திரனும், அங்கு-அப்பொழுது தையல் உரைத்த மாற்றம் கேட்டு - திரௌபதிகூறிய வார்த்தையைக் கேட்டு,- '(நாங்கள்-, கை அறு தொண்டர் ஆகி கான் புகல் -சுவாதந்தரியமற்ற அடிமைகளாயிருந்துகொண்டு காட்டிற்குச் செல்லுதல், வழக்கும் அன்று - முறைமையுமன்று; ஆல் - ஆதலால், ஐயுறாது - மங்கலங்காது, இன்னம் - இன்னமும், ஒருகால் -ஒருதரம், அருஞ் சூது - (வெல்லுவதற்கு அரிய) சூதை, ஆடுதும் - ஆடுவோம்,' என்றான் - என்று கூறிச்சூதாடத் தொடங்கினான்; (அப்பொழுது), மெய் உற இருந்த வேந்தர் - சாட்சியாகவிருந்தஅரசர்கள், மீளவம் - மறுபடியும், காணல் உற்றார் - (அச் சூதாட்டத்தைப்) பார்க்கலானார்கள்;(எ - று.) 'நாங்கள் மீண்டுவந்த பிறகு இராச்சியத்தைக் கொடுப்பதற்குத் துரியோனாதியர்கள் ஏதாவதுபோக்குச் சொல்லக்கூடு |