பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 411

மென்பது மாத்திரமன்று; அடிமைகள் தலைவரது விருப்பின்படி ஊழியஞ்செய்து
கொண்டிருக்க வேண்டுமே யன்றி,சுதந்திரமுள்ளவர் போலத் தங்கள்
மனத்திற்கு விருப்பமானதொரு காட்டிற்குச் செல்லுதல்நீதிமுறைமைக்குத்
தக்கதன்றாதலால், சூதாடி எமது அடிமைத்தன்மையைப் போக்கிக்கொள்வதே,
இப்பொழுது நாங்கள் செய்யவேண்டிய காரியம்' என்று சொல்லித் தருமன்
மீண்டுஞ்சூதாடத்தொடங்க, முன்பு சூதாடும்போது சபையிலிருந்த
அரசர்களெல்லாரும் மீண்டும் சாட்சியாகப்பார்க்கலானார்க ளென்பதாம். 
ஐயுறாது - ஐயமுறாது என்பதன்தொகுத்தல்.                      (432)

280,-தருமபுத்திரன்திரௌபதியின் மொழிப்படியே
திருமாலின் நாமங்களைச்சொல்லுதலும், தன் புண்ணியங்களைப்
பந்தயம் வைத்தலும்.

சத்தியவிரதன் றானுந் தன்பெருந் தேவி சொல்லப்
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாம மேத்தி
ஒத்தவெண் கவறு வாங்கச் சகுனியா தொட்ட மென்றான்
புத்தியாலவனும் யான்செய் புண்ணிய மனைத்து மென்றான்.

     (இ -ள்.) தன் பெருந் தேவி சொல்ல - தனது சிறந்த பட்ட
மகிஷியாகிய திரௌபதி ('சூதாடும்போதுதிருமாலின் துவாதச நாமங்களைச்
சொல்லியேத்தி ஆடவேண்டும்' என்று தருமனுக்குச்) சொல்ல,(அவ்வாறு),-
சத்தியவிரதன் தானும் - உண்மை பேசுதலையே விரதமாகக்
கொண்டவனானதருமபுத்திரனும்,-பத்தியால் வணங்கி - பக்தியோடு
(திருமாலைக்குறித்து) நமஸ்கரித்து, மாயன்பன்னிருநாமம் ஏத்தி - திருமாலினது
துவாதசநாமங்களையும் எடுத்துத் துதித்து, ஒத்தவெள்கவறுவாங்க-
ஒன்றற்கொன்று சமமான வெண்ணிறமுள்ள பாச்சிகைகளை (ஆடுமாறு
தன்கையில்)எடுக்க,-(அப்பொழுது),-சகுனி-? ஓட்டம் யாது என்றான் - ('இந்த
ஆட்டத்தில் நீ வைக்கும்)பந்தயம் என்ன?' என்று வினவினான்; அவனும் -
அத்தருமபுத்திரனும், புத்தியால் - ஆலோசனையோடு,யான் செய் புண்ணியம்
அனைத்தும் - ('இப்பொழுது யான் வைக்கும் பந்தயமாவது) நான்
(இதுவரையிலுஞ்) செய்துள்ள எல்லாப் புண்ணியங்களுமே', என்றான்-என்று
கூறினான்; (எ - று.)

     'யான் சயித்தால் நாங்கள் அடிமையினின்று நீங்கினவர்களாவோம்; நீ
சயித்தால், துரியோதனன் எனது புண்ணியமெல்லாவற்றையும் பெறக்கடவன்'
என்று தருமன் பந்தயம் வைத்தனனென்க.  வெற்றிபெறவிரும்புபவர்
கடவுளை முன்னிட்டுக் கொண்டே காரியத்தைத் தொடங்கவேண்டுமென்பது
இச்செய்யுளின்முன்னிரண்டடிகளிற் போதரும்.  திரௌபதியின் சொற்படியே
சூதாடத் தொடங்கியபோது சகுனிபந்தயமென்ன எனக்கேட்டதற்கு, உடனே
தருமன் தனது ஆலோசனைத்திறத்தால் விடை கூறின னென்பார்,'புத்தியால்'
என்றார்.  திருமாலின் பன்னிரு நாமங்களாவன-கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன்,