பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 412

விஷ்ணு, மதுஸூதநன், த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன்,
பத்மநாபன், தாமோதரன் என்பன. ஸத்யவ்ரதன், தேவீ, பக்தி, நாமம், புத்தி,
புண்யம்-வடசொற்கள்.                                       (433)

281.-தருமபுத்திரன் வெல்லுதல்.

உருட்டிய கவறு நேமி யுடையவ னருளினாலே
மருட்டிய சகுனி யெண்ணின்வழிப்படா துருண்ட காலை
இருட்டிய விழியான் மைந்தனிதயமு மிருண்டு சோரத்
தெருட்டிய வுணர்வின்மிக்கோன் செப்பிய யாவும் வென்றான்.

     (இ -ள்.) உருட்டிய - (தருமபுத்திரன்) உருட்டியாடிய, கவறு -
பாச்சிகையானது, நேமி உடையவன் அருளினாலே- (சுதரிசன மென்னுஞ்)
சக்கரத்தை ஆயுதமாகக்கொண்டுள்ள திருமாலினது திருவருளினால்,
மருட்டியசகுனி எண்ணின் வழிப்படாது - மாயஞ் செய்த சகுனியினது
விருப்பப்படி உருண்டு விழாமல், உருண்டகாலை-(தருமனது
விருப்பத்தின்படியே) உருண்டு விழுந்த சமயத்தில்,-தெருட்டிய உணர்வின்
மிக்கோன்- தெளிந்த அறிவுமிக்குள்ளவனாகிய தருமபுத்திரன்,-இருட்டிய
விழியான் மைந்தன் இதயம்உம் இருண்டுசோர-இருளின் தன்மையை
யடைந்துள்ள கண்களையுடையவனான [குருடனான] திருதராட்டிரனது
புதல்வனாகியதுரியோதனனது மனமும் மயங்கித் தளரும்படி, செப்பிய யாவும்-
பந்தயமாகக் குறிக்கப்பட்டஎல்லாவற்றையும், வென்றான்-சயித்தான்; (எ - று.)

     கடவுளருளை முன்னிட்டுக்கொண்டு ஒரு காரியஞ் செய்பவர் வெற்றி
பெறுவரென்பது, இதனாற் பெறப்படும். பஞ்சபாண்டவரும் திரௌபதியும்
புதல்வரைவரும் முதலியவர்களின் அடிமை எதிரிகள் வைத்த
பந்தயப்பொருளாகவும், தனது புண்ணியம் தனது பந்தயப்பொருளாகவுங்
கொண்டு தருமன் சூதாடித்திருமாலருளால்வென்றன னென்பதாம்.

    தெருட்டிய=தெருண்ட; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி,
திரௌபதியினால்தெளிவிக்கப்பட்ட எனினுமாம்.                    (434)

282.-தம்பிமார் முதலியவருடன்தருமபுத்திரன் திருதராட்டிரன்
முதலியோரிடம் விடைபெற்றுக் காட்டிற்குச் செல்லுதல்.

வென்றுதன் னிளைஞ ரோடும் மேதகுபுதல்வ ரோடும்
மன்றலந் தெரிவை யோடும்மற்றுளோர் தங்க ளோடும்
அன்றுதன் குரவர் பொற்றாளன்புடன் வணங்கிக் கானஞ்
சென்றன னென்ப மன்னோசெழுநில முடைய கோமான்.

     (இ -ள்.) செழுநிலம் உடைய கோமான் - பலவகைவளங்களும்
நிறைந்த பூமிக்குத் தலைவனானயுதிஷ்டிரராஜன், வென்று (அந்த மறுசூதில்
தான்) ஜயித்து, தன் இளைஞரோடும் - தனது தம்பிய