ராகிய (வீமன்முதலிய) நால்வருடனும், மேதகு புதல்வரோடும் - மேன்மையை அடைந்துள்ள புத்திரர்களுடனும், மன்றல்அம்தெரிவையோடும் - (தம்மால்) மணஞ்செய்துகொள்ளப்பட்ட அழகிய திரௌபதியுடனும், மற்றுஉளோர் தங்களோடும் - மற்றும் தன்னைச்சேர்ந்த பரிவாரங்களுடனும்,-அன்று - அப்பொழுது,-தன்குரவர் பொன் தாள் - (திருதராஷ்டிரன் முதலியவர்களான) தனதுபெரியோரது அழகிய திருவடிகளை,அன்புடன் வணங்கி - அன்போடு நமஸ்கரித்து, கானம் சென்றனன் - காட்டுக்குச் சென்றான்; (எ -று.) தருமபுத்திரன், வனவாசஞ்செய்யுமாறு கருதி, திருதராட்டிரன் வீடுமன் விதுரன் துரோணன் அசுவத்தாமன்கிருபன் முதலிய பெரியோரிடத்து விடைபெற்று, விதுரனது விருப்பத்தின்படியே தாயான குந்திதேவியைஅவ்விதுரன் மாளிகையிலேயே விட்டிட்டு, தானும் தன் தம்பியர் நால்வரும், தமது மனைவியானதிரௌபதியும், தமது புரோகிதராகிய தௌமியமுனிவருமாகக் காட்டுக்குச் சென்றன னென்ற வரலாற்றைமுதனூலால் அறிக. திரௌபதியின் வேண்டுகோளின்படி தருமன் ஆடிய மறுசூதால் திரௌபதியின்புதல்வர்கள் தாஸபுத்திரர் [அடிமைகளின் பிள்ளைகள்] என்று பிறர் எடுத்துச் சொல்லக்கூடியசிறுமொழியினின்றும் நீங்கி மேன்மைப்பட்டார்களாதலால், அவரை 'மேதகு புதல்வர்'என்றாரென்னலாம். என்ப, மன், ஓ - ஈற்றசைகள். (435) 283.-அப்பொழுதுதுஷ்டசதுஷ்டர்கள் தவிர, மற்றையாவரும் வருந்துதல். ஒழிவுசெய் கருணை நால்வ ருள்ளமுமொழிய வேனை வழுவறு மன்ன ருள்ள மம்மரோடயர்ந்து விம்மக் குழவிபா னுகர்த லின்றிக்கொற்றமா நகரி மாக்கள் தழலென வுயிர்த்து மாழ்கித்தனித்தனி புலம்ப லுற்றார். |
(இ -ள்.) கருணை ஒழிவு செய் நால்வர் உள்ளமும் ஒழிய - கருணையை நீங்கியுள்ள துஷ்டசதுஷ்டர்களது மனம்தவிர, வழு அறு ஏனைமன்னர் உள்ளம் - குற்றமற்ற மற்றையரசர்களது மனம், மம்மரோடு அயர்ந்துவிம்ம - மயக்கங் கொண்டு தளர்ந்துபுலம்பவும்,-குழவி பால் நுகர்தல் இன்றி- குழந்தைகளும்பாலுண்ணாதுதவிர்ந்திருக்கவும், கொற்றம் மா நகரி மாக்கள் - வெற்றிபொருந்திய பெரியஅவ்வத்தினாபுரியிலுள்ள ஜனங்கள், தழல் என உயிர்த்து மாழ்கி - நெருப்புப்போல (உஷ்ணமாக)ப்பெருமூச்செறிந்து வருந்தி, தனி தனி புலம்பல் உற்றார் - தனித்தனியே புலம்புவாராயினர்; (எ - று.) அறிவு நிரம்பாத குழந்தைகளும் வருத்தமிகுதியாற் பாலுண்ணாதிருந்தன எனவே, மற்றையோரது வருத்தம்சொல்லாமலேயமையுமென்பது கருத்து. இதனை, "பான்மறந்தன பசுங்குழவி" என்பதனோடு ஒப்பிடுக. தமதுநகரத்து அரசன் வெற்றிபெற்றிருக்கவும் அந்நகரத்துச் சனங்கள் அவனது கொடுங்கோன்மை |