பக்கம் எண் :

418அபிதான சூசிகையகராதி

  மலர்மாலையுடையவன், சூது-6;
  மெய்ப்புஇறப்பு அற்ற
  நீதித்தருமன்,24;
  விரதமாக்கமென்றறிந்தறம்  
  பேணுவான்,63; மெய்தவா மொழி
  வேந்தன்,89; புரைநிலங்கடந்தறம்
  புரியுநீர்மையான்,உரைநிலங்கடந்த
  சீருரைகொள்பேரினான், 102;
  நளினமும்புறந்தரு
  நயனவேந்தன்,103; புனிதன், 111;
  மடங்கலேறனையஆண்மையான்,
  125;கருமம் நீதி சேர்கல்வி
  மந்திரம்பெருமை ஆண்மை தாள்
 பீடுநீடுபேர் தருமம் யாவையும்
  இயற்கைக்குணங்களாக்
  கொண்டவன்,129; அறங்கள்
  நிலைபெறுஞ்சொல்நீதியான், 155;
  ஒப்பிலாதவேள்விமன்னன், 164;
  ஈரம்வைத்தசிந்தையன், 175;
  அசஞ்சலன்,189;  மனுநெறி
  கூரிசையோன்,211;
  தன்னேரில்லான்,239;
  உண்மைக்குஉறுதிபோல்வான்,
  245; சத்தியவிரதன்,280;
 விபுதர்போல்வான், 284. 
திருதராட்டிரன்:- 
 விழியிலாவென்றிவேந்தன், சூது-
  50, 183;காவியார்
  தொடைக்காவலன்,74;
  பாண்டவரிடத்துநேயமுண்டு
  போல்வஞ்சநெஞ்சன்,133;
  அபோதமுடையன்,183;
  குருடென்றுரைக்குங்கொடியோன்,
  227; விரகினுக்கோர்
  வீடுபோல்வான்,264; நின்றவா
  நில்லாவஞ்சநெஞ்சினன், 271;
  மனம் கல்நெடுங்குன்று
  அன்னான்,273.
திரௌபதி:- கனற்பிறந்தகொடி-
  இராய, 8,103; சூது-192; யாக
  பத்தினியாய்தருமனுக்கு
  வலத்தினில்இருத்தல், இராய-103; 
 தருமவல்லி, சூது-125; தருமவஞ்சி,
  186;உருதகு கற்பி
னாள், 201; விண்ணில் தோன்றும்
வடமீனன்றி மண்ணில் உவமை
சொல்ல மடந்தையர் யாருமில்லாப்
பண்ணலங், கடந்த
மென்சொற்பாவை 202; மாசறு
மரபின்வல்லி, 210;
தழலோவென்னுங்கற்புடைய
தனிநாயகி, 221;
தலைநாளளித்ததழல் போல்வான்,
226; நாணே முதலான
நாற்குணனும் நண்ணுங்கற்பும்
நயந்தணிந்தபூணேயனையாள்,
227; அல்லார்கூந்தல்விரித்த மயில்
அனையாள், 237; கற்பினுக்கும்
மரபினுக்குந் தெய்வம், 250;
எழுதரிய மடப்பாவை, 251;
அருந்ததிக்கும் எய்தாத
கற்புடையாள், தெய்வமன்னாள்,
254; கற்பான் மிக்குயர்
வேள்விக்கடன் சுமந்த மடமயில்,
260.
துச்சாதனன்:- துரியோதனன் தம்பி;
சொல்லிடை நஞ்சு கக்குந்
துன்மதியுடையவன், சூது-8;
அறனில்லான், 213;
பொல்லாவசையே
புகழ்பூணாக்கொண்ட புல்லன்,
233; அறிவுகேடன், 249;
துகிலினையுரிந்த சூரன், 268.
தும்புருநாரதர்:- இசையில் வல்ல
தேவமுனிவர், இராய-9.
துரியோதனன்:-யாகத்தில்
தருமனால் வரம்பிலாநிதிகள்
யாவும் இவன் கண்காணிப்பில்
வைக்கப்பட்டன. இராய-102;
வலம்புரி [நஞ்சாவட்டை]
மாலையன், 31,60; மின்னொளிரும்
வேலான், 47; அவன் சூழ்ந்த
தீச்செயல்கள், 70;
அதருமத்தைக்கொண்ட
சேனையையுடையவன், 111;
வேலிராசராசன், 172;
போதமில்லான், 196; நாககேதனன்,
203; பாவி, 212; நஞ்