பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 423

ஆவணம்-அவணம்என்பதன்
  அகரச்சுட்டுநீண்டது, இராய-76
ஆழியான்-கண்ணபிரான்,இராய-141
ஆறு அலாதன-முறைமை
  அல்லாதவை,சூது-72
ஆன்றார்-பெரியோர்,சூது-213
ஆனகம் - துந்துபிவாத்தியம்,
  சூது-56,250
ஆனாமல்-நீங்காமல்,இராய-4
ஆனெறிந்தகொலை-கோஹத்தி,
  சூது-167
இகல்-வலிமை,சூது-3, 22
இகலெறிதல்- பகையழித்தல்,
  சூது-130
இகலோன்-பகைவன்,சூது-70
இங்கிதம்-மெய்ப்பாடு,இராய-84;
  குறிப்பு,இராய-95
இசைக்கும்,(உவமவுருபு) - இராய-52
இசைவு - உடன்பாடு,சூது-42
இடைநிலைத்தீவகம்,சூது-221
இடைப்போலி,இராய-45
இணையடி-உபயபாதம்,சூது-246
இதயங்கன்றுதல்பொறாமையால்,
  இராய-113
இதயம் வைத்தல்,இராய-105
இதழி-கொன்றைமரம்,சூது-96
இந்திரசாலம்-பெருமாயை,
  இராய-116,140
இந்திரபுரி-அமராவதி,இந்திரப்பிரத்தம், இராய-89
இந்திரன்கிழக்குத்திக்குப் பாலகன்,
  இராய-42
இந்து முகசரங்கள்- 
  அர்த்தசந்திரபாணங்கள்,இராய-56
இபம்-யானை,சூது-85, 99
இம்பர்-இப்பொழுது,இவ்விடம்,
  சூது-163
இமகிரியில்பிரமன் மகம் செய்தான்,
  இராய-109
இமைப்பு-மாத்திரைப்பொழுது,
  சூது-154
இயக்கு-கதி,நடை, சூது-82
இயம்-வாத்தியம்,இராய-40; சூது-85
இயலுதல் -சஞ்சரித்தல், சூது-17
இரட்டி-இருமடங்கு,சூது-167
இரட்டுறமொழிதல், இராய-6,152,
  சூது-31,198
இரட்டைக்கிளவி, இராய-50
இரதம்=ரஸம்,இனிமை, இராய-11;
  சூது-63
இராசமண்டலம்-அரசர்கூட்டம்,
  இராய -116
இராயசூயம்,பக்கம் 1, இராய-13
இருங்கிளை-மிக்க சுற்றம்; இராய-130
இருஞ்சிறப்பு-மிகச்சிறந்தஉபசாரம்,
  இராய-150
இருநிதிக்கிழவன்-குபேரன்,இராய-45
இருப்பு-ஆசனம், சூது-5
இருபிறப்பாளர்-பிராமணர்,முனிவர்,
  இராய-68
இல்-வீடு, சூது-141,156
இல்பொருளுவமை,இராய-20, 52, 53,
  சூது-118,231
இளங்கமுகின்மென்பாளை
  சூடுதல், சூது-93
இளவல்-தம்பி,இராய-140; சூது-240
இறுதல்-ஒடிதல்,சூது-120
இறை-திறை;[இறுத்தல் -
  செலுத்துதல்],இராய-44
இறைஞ்சுலர்-பகைவர்,இராய-8
இறைஞ்சுதல்- வணங்குதல், சூது-63
இன்னே-விரைவுகுறிக்கும்
இடைச்சொல், சூது-51
இனைத்தென்றறிபொருளில் வந்த
  முற்றும்மை,இராய-81
இனைதல்-வருந்துதல்,இராய-37