ஈர்தல் -அறுத்தல்; வருத்துதலுக்கு
இலக்கணை,சூது-37
ஈரம் -அருள், சூது-175
ஈரிரண்டுகடல்- நாற்றிசைக் கடல்கள்,
இராய-42
உகம்-யுகம்,இராய-46
உகளுதல்-புரளுதல்,சூது-14
உகிர்-நகம்,இராய-26
உச்சம்-மேல்,இராய-126
உசாவல்-விசாரித்தல்,சூது-271
உட்குதல்-அஞ்சுதல்,சூது-99
உடு-நக்ஷத்திரம்,சூது-259
உண்டி-உணவு,சூது-36
உண்மை-தத்துவம்,சூது-138
உத்தரகுருக்கள்-வடதிசையரசர்கள்,
இராய-48
உத்தரீயம்-மேலாடை,சூது-246
உத்திரம்=உத்தரம்;விட்டம், இராய-6,
சூது-45
உததி-கடல்,இராய-31, சூது-38
உபகரணம்-சாதனம்,இராய-4
உபகாரம்-காணிக்கைப்பொருள்,
சூது-86
உபபாண்டவர்பெயர்கள்,சூது-278உரைஉபலட்சணம், சூது-124, 156,172,265
உம்பர் கணம்-தேவர்களின்கூட்டம்,
இராய-2
உம்பராலயம்-தேவலோகம், சூது-61
உம்பரினமிழ்து-தேவாமிருதம்,
சூது-92
உம்பி-உம்தம்பி[மரூஉ], சூது-127
உயர்வுநவிற்சியணி,இராய-100, 134;
சூது-84
உரகம்-பாம்பு,சூது-221
உரகர்-நாகலோகத்தார்,சூது-85
உரங்கம்=உரகம்-பாம்பு,சூது-76
உரங்குடியிருந்ததோளான், சூது-197
உரம்-திண்மை,பலம், வலிமை,
இராய-7;சூது-76
உரிதல்-களைதல்,அவிழ்த்தல்,
சூது-244,249
உரிவை-தோல்,இராய-104
உருத்தல்-கோபித்தல்,இராய-114;
சூது-171,191,241
உருப்பம்-கோபம்,சூது-245
உரும்-இடி,சூது-191,197,220,244
உருவகவணி,இராய-45
உருவக விசேடம்,இராய-75
உருள்-சக்கரம்,இராய-132
உரை-புகழ்,இராய-136
உரையலாதுரைக்கும்மாற்றம், சூது-201
உலகவழக்குநவிற்சியணி,சூது-24, 223
உவமையணி,இராய-133,
சூது - 39,52, 96, 229, 252
உவர்ப்புணரி-லவணசமுத்திரம்,
சூது-199
உழத்தல்-வருந்துதல்,சூது-217
உழி-இடம்,இராய-113; சூது-194,210
உள்-மனம்,சூது-176
உற்பாதம்-துர்நிமித்தம்,இராய-35; சூது-220, 228, 260
உறழ்-உவமவுருபு,சூது-23, 244
ஊடு-உள்ளிடம்,சூது-54
ஊதை-பெருங்காற்று, சூது-121
ஊமர்-ஊமைகள்,சூது-237
ஊர்கோள் -பரிவேஷம், சூது-259
ஊழ்வினை சூதுக்குஉவமை, சூது-29
ஊழி-முறைமை,இராய-109;
கற்பாந்தகாலம்,இராய-134
எஞ்சினர்-வலியொடுங்கினவர்,
இராய-137
எஞ்சுதல் -உயிரொடுங்குதல், சூது-20
எண்ணிரண்டாம்உபசாரம் -
ஷோடசோபசாரம்,இராய-110
எதிர்நிரனிறைப்பொருள்கோள்,
இராய-97,98
எந்தகு-எதற்காக:தெலுங்கிலிருந்து
வந்த திசைச்சொல்,சூது-15