பக்கம் எண் :

428அரும்பதவகராதி முதலியன

  குஞ்சரம்வானரம் முதலியவற்றின்
  நடை ஒப்பு,சூது-82
குபேரன்-சந்திரன்,இராய-115;
  சூது-115
குபேரன்திசை-வடக்கு,இராய-45
கும்பம்-கலசம்,சூது-61
குரகதம்-குதிரை,சூது-83
குரம்-குளம்பு,சூது-100[282
குரவர்-பெரியோர்,சூது-41
குரவன்-பெரியோன்,சூது-125
குரு-மிகுதி[வடசொல்],சூது-241
குருகு-நீர்வாழ்பறவை, அன்னம்
  எனினுமாம்;சூது-55
குருகுலாதிபன்,தீர்க்கசந்தி பெற்றது,
  சூது-145
குருகுலேசன்-குணசந்திபெற்றது,
  சூது-138
குலிங்கம்-குலிங்கதேசம்,இராய-42
குவவு-திரட்சி,இராய-18
குவளைமாலைதருமனுக்குரியது,
  சூது-6
குழகர்-கட்டழகுடையவர்[குழகு-
  கட்டழகு],சூது-66
குழை-காதணி,இராய-75
குறள்கருத்துவந்துள்ளமை,
  சூது-11,266, 267
குறிப்பு-மனச்சங்கற்பம், இராய-8
குறுக-விரைவாக,சூது-263
குறைதல்-தாழ்வடைதல்,சூது-225
குன்றால்மழைதடுத்தமை, இராய-30
கூடம்-மண்டபம்,சூது-61
கூடலின்புறவூடல்,சூது-55
கூலம்-கரை,இராய-16
கூறை-ஆடை, சூது-253
கேசரி-சிங்கம்,இராய-27
கேதனம்-கொடி,இராய-27
கைதை-தாழைமரம்,சூது-105
கையாற்கண்புடைத்தல்,
  அவலம்பற்றியது,சூது-221
கையெறிதல்-கைகொட்டுதல்,
  சூது-209
கைவருதல்-கைதேர்தல்,சூது-182
கைவரை-யானை,சூது-262
கொங்கு-வாசனை,இராய-84
கொச்சை-நிரம்பாமென்சொல்,
  சூது-93
கொடியாள்-கொடி போன்றவள், கொடுமைக்கு இலக்கானவள், சூது-219
கொடுமரம்-வில்,சூது-153
கொடுமுடி-சிகரம்,சூது-101
கொண்டல்-மேகம்,சூது-231
கொண்டார்-கணவர்,சூது-219
கொந்து-கொத்து,தொகுதி,
  சூது-253 
கொம்பு-ஊதுகொம்பு, இராய-134
கொள்ளை-மிகுதி, சூது-138
கோ-மலை;யானைக்கு இலக்கணை,
  சூது-80
'கோகோ' -
  இரக்கவொலிக்குறிப்பிடைச்சொல், 
  சூது-231
கோட்டம்-கோணுதல்,சூது-203
கோடி-கொள்வாயாக, சூது - 40
கோடியாடை-புதுவஸ்திரம், சூது-249
கோடு-கிளை,சூது-120
கோத்தகோவை-தொடர்ச்சியாக
  ஆலோசித்தஆலோசனைத்தொடர்,
  சூது-64
கோது-அசாரம்,சூது-40; குற்றம், 162
கோதை-மாலை,சூது-139
கோபாலர்-பசுக்களைக்காக்கும்
  இடையர்கள்,இராய-30, 114
கோயில்-அரண்மனை,சூது-125
கோலம்-அழகு,இராய-58,
  சூது-45,209
கோவிந்தன்,சூது-247 உரை
கோள்-அறிவு,சூது-82
கோளகை-அண்டகோளத்தின்
  முகடு, இராய-138
கோளரி-சிங்கம், நரசிங்கமூர்த்திக்கு
  வந்தது,இராய-26
சங்கரன்-சிவபிரான்,(அடியார்க்கு
  இன்பத்தைச்செய்கிறவன், சம்-
  சுகம்),இராய-95
சங்கு-சங்குவளையல்,இராய-74
சங்கை-கூச்சம்,இராய-79