பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 429

சண்டப்ரசண்டவேகம்,இராய-121
சத்துருகாதினி- வீமன்கதைக்குப்
  பெயர்,இராய-7 உரை
சதகோடி-நூறுகோடி,வச்சிராயுதம்,
  இராய-15
சதாகதி-காற்று,வாயு,  இராய-15
சதாகதிசேய்-வீமன்,இராய-15
சதிப்பது-அழிப்பது,சூது-24
சதிர்-சாதுரியம்,சதுரப்பாடு, சூது-187
சதுரம்-நான்கு,சூது-140
சந்தம்-அழகு, இராய-29
சந்திரன்தோன்றிய ஐந்து இடங்கள்,
  சூது-78
சந்திரனைக்கண்டு கடல் பொங்கும்,
  சூது-57
சந்து-சந்தனம், இராய-29
சப்தகுலகிரி, இராய-47
சம்புநாடு-ஜம்பூத்வீபம், [சம்பு-நாவல்]
  சூது-264
சமரம்-போர், சூது-15
சமைத்தல் -கட்டிமுடித்தல், சூது-48
சரதம்-நிச்சயம், சூது-269
சராசரம்-ஜங்கமம் தாவரம், சூது-1
சராசனம்-வில், இராய-152
சல்லியம்-அம்புமுனை;
 உபத்திரவத்திற்கு இலக்கணை, 
  சூது-215
சலம் -இழிந்தநிலைமை, சூது-215
சாதியொருமை, சூது-80 உரை.
சாதுரங்கம்- சதுரங்கசேனை,
  சூது-76
சாயை-நிழல், சூது-149
சாயை=சாயா:இவளைச்சூரியன்
 மனைவியென்பர், சூது-89
சாயையும்தபனனும் என, சூது-89
சாரம்-சிறந்தது, சூது-175
சால்-கலப்பை செல்லும்வழி,
 பெருந்தாழி; சூது-256
சாலி-செந்நெல், சூது-256
சிகரி-மலை,[வடசொல்], சூது-16
சிகாமணி-தலைமேலணியும்
 இரத்தினம், இராய-113
சிசுபாலன்,ஜாரசோர சிகாமணி
  என்றுகண்ணனைப்பழித்தல்,
  இராய-120
சிசுபாலன்நிந்தித்த வார்த்தைகள்
 உயர்ச்சியும் தாழ்வும் தோன்றுவன,
  இராய-126
சிந்து-கடல், இராய-147
சிந்தை-எண்ணம், சூது-12
சிரித்தல்-பரிகசித்தல், சூது-215
சிலம்பு-மலை, சூது-52
சிலைவேள்-மன்மதன், இராய-39
சிலைவேள்தேர்-தென்றற்காற்று,
  இராய-39
சிலைவேள்தேர்வரு திக்கு-தெற்கு,
  இராய-39
சிலேடையணியை அங்கமாகக்
 கொண்டுவந்த ஏதுவணி, சூது-145
சிவிகை-தண்டிகை, சூது-89
சிறப்புருவகவணி, சூது-84
சீயம்-சிங்கம், சூது-149, 156
சுதன்-புத்திரன், இராய-141
சுதன்மை-சுதர்மை என்கிற
 தேவேந்திர சபாமண்டபம், இராய-6
சுந்தரம்-அழகு, சூது-10
சும்மை=சுமை,பாரம், சூது-109
சுரதம்-போகம், சூது-269
சுரதமென்கொடி, சூது-269
சுரபதி-இந்திரன், இராய-2
சுரர்-தேவர், சூது-276
சுரர்தினம்ஈராறு-பன்னிரண்டு
 வருஷங்கள், சூது-276
சுரிகுழல்-நுனிசுருண்ட கூந்தல்,
  சூது-119
சுரும்பு-வண்டு, இராய-14; சூது-54
சுருவை-ஓமாக்கினியில் நெய்யை
  மொண்டுசொரியும்
 அத்திமரத்தாற் செய்த அகப்பை;
 நெய்த்துடுப்பு, இராய-106
சுவாகை-சுவாகாதேவி, [அக்