போதம்-அறிவு, சூது-196
போது-தாமரைப்பூ, மலர்,
சூது-34,230
போதும்-செல்வோம், இராய-16
போர்நூல்-யுத்த சாஸ்திரம்,
இராய-136
போனகம்-உணவு, சூது-56
மகஞ்செய்வேந்தன்-யஜமானன்,
இராய-136
மகம்-யாகம், இராய-21, சூது-2
மகரம்-சுறாமீன், சூது-102
மகளிர்க்குப் பாதம் சிறுத்திருத்தல்
உத்தமவிலக்கணம், இராய-74
மகளிர்கண்ணுக்கு வண்டு
உவமை,இராய-83
மகளிர்பிடிமிசைபோதல், சூது-89
மகிதலம்-நிலவுலகம், சூது-243
மகீ-பூமி,இராய-44
மகுடமகிபர்- மகுடவல்த்தனம்; ஒரு
கோடிகிராமம் ஆள்பவர்,
இராய-55
மங்குல்-மேகம், சூது-148
மஞ்சு-மேகம்,இராய-57
மட்டு-தேன்,சூது-108
மடக்குஎன்னுஞ் சொல்லணி, சூது-64
மடங்கல்-ஆண்சிங்கம், சூது-7,125
மடவரல்-பெண், சூது-246
மடிதல்-கூர்மழுங்குதல், சூது-11
மண்ணாடல் -பூமியை யரசாளுதல்,
சூது-33
மத்தவாரணம்- மதயானை,
இராய-134
மத்திகை-சம்மட்டி, இராய-55
மத்திமதீபம்,இராய-118; சூது-65, 122
மதம்பொழியும் ஏழுறுப்புகள்,
சூது-79
மதித்தல்-கடைதல், இராய-16
மதுகரம்-வண்டு, சூது-54, 113
மதுரம்-இனிமை, தேன், சூது-140
மந்தாகினியாள் - கங்காதேவி,
சூது-233
மந்திரச்சுற்றம் - மந்திரிகள்,
இராய-22
மந்திரம்-மாளிகை, [வடசொல்] சூது
-140; இரகசியம், சூது-253
மம்மர்-மயக்கம், சூது-283
மயக்கவணி, சூது-58, 97, 100, 104,
107,220
மயக்கு-மாயை, அஞ்ஞானம், சூது-1
மயர்வு-ஒன்றை மற்றொன்றாக
மாறுபட உணரும் விபரீத
ஞானம், இராய-110
மயில் முல்லைநிறப்பறவையாக்
கூறப்பட்டது, சூது-97
மரன்-மரம்: மகரனகரம்மாறி
வருஞ்சொல், சூது-121
மரு-பொருந்திய, சூது-2; வாசனை,
சூது-96, 176, 241, 248
மருங்குதல் - இடை, இராய-75
மருச்சுதன் - காற்றின் குமாரனான
வீமன், இராய-42 [மருத்-காற்று]
மருட்டுதல்-மருளச் செய்தல், மயக்குதல், சூது-50
மருதநிலக் கருப்பொருள்கள்,
சூது-92, 93
மருப்பு-கோர தந்தம், சூது-1
மருமம்-உயிர்நிலை; மனம் என்ற
பொருளில் வந்தது, சூது-186
மருள் - விபரீதஞானம், திரிபுணர்ச்சி,
சூது-252
மல்லமர்-உடல் வலிமை கொண்டு
செய்யும் போர், இராய-22
மல்லல்-வளப்பம், சூது-212
மலர்ப்பூவை-இலக்குமி, சூது-152
மள்ளர்-வேலையாட்கள், சூது-44
மற்று-பிறிது, சூது-165
மறலி-யமன், சூது-191
மறு-குற்றம், சூது-37
மறுகு-வீதி, தெரு, இராய-119, சூது-
56
மன்-அரசன், இராய-43
மன்மதன் படைக்கலம், இராய-80