பக்கம் எண் :

438அரும்பதவகராதி முதலியன

 மன்மதனம்பு ஐந்து, அவற்றின்
  தொழில், இராய-81
மன்முறை-அரசமுறைமை, சூது-273
மன்றல்-வாசனை, அழகு, இராய-83,
  126; சூது-74, 140; திருமணம்,
  சூது-282
மன்னவர்க்கெல்லாந் தினகரன்-
  ராஜமார்த்தாண்டன், சூது-98 
மனம் பறையறைதல், இராய -24
மனிதர்க்கு ஒருவருடம் தேவர்க்கு
  ஒருதினமாம் என்பது நூற்றுணிபு,
  சூது-276
மனுநெறிவழக்கு, சூது-192
மாசுணம்-பாம்பு, சூது-36
மாடம்-மாளிகை, சூது-143
மாண்டவர்-மாட்சிமைப்பட்டவர்,
  [மாண்-பகுதி], சூது-112
மாதிரம்-திக்கு, இராய-38, 139
மாது இடத்தான்-சிவபிரான், இராய-6
மாதுலன்-மாமன், சூது-31, 62
மாம்பிஞ்சின் உட்பிளவு மகளிர்
  கண்ணுக்கு உவமை, இராய-34
மாமன்-மாமனார், சூது-223, 232, 233
மாமி-மாமியார், சூது-217
 
மாருதமதலை-வீமன், சூது-88
மால்-மயக்கம், இராய-136; பெரிய,
  சூது-84
மாலைப்பொழுது புனிதரை
  யொத்தது, சூது-142
மாழ்குதல்-வருந்துதல், சூது-283
மாற்றம்-வார்த்தை, இராய-2
மாற்றுநிலையணி, இராய-52
மாறலார்-நண்பர், சூது-72
மாறு-பகைவர் (பண்பாகுபெயர்),
  சூது-72; 168; பதில், 168
மான்பிணை-பெண்மான், சூது-251
மான்மதம்-கஸ்தூரி, இராய-19
மானம்-பெருமை, சூது-174
மானவர்-மனிதர், இராய-69;
  சூது-204

மிகையுயர்வுநவிற்சியணி, இராய-5;
  சூது-57
மிடியர்-தரித்திரர், [மிடி-வறுமை],
  சூது-166
மிலைச்சுதல்-சூடுதல், சூது-92
மீளி-ஆண்பாற்சிறப்புப்பெயர்,
  சூது-126
மீளியர்-வீரர்கள், சூது-100
மீன்படைத்த மதிமுகத்தாள்,
  இல்பொருளுவமை, சூது-242
முகங் கறுத்தல் அவமானத்தால்,
  இராய-113
முகங்கொள்ளுதல், சூது-262
முகந்தொறும் எச்சிலாக்குதல்,
  இராய-119
முகில்ஏழ், இராய-131
முகுளம்-அரும்பு, இராய-79
முகூர்த்தம்-இரண்டு நாழிகைப்
  பொழுது, இராய-98
முட்டி=முஷ்டி: கைக்குத்து, இராய-23
முடித்தேவி-பட்டமகிஷி, சூது-238
முத்தன்=முக்தன்:மோட்சலோகத்திற்கு
  உரியவன், சூது-14
முத்தீ-இராய-106; 107
முத்துப்பிறக்குமிடங்கள்,சூது-107
முதுகுகாணல்-
  புறங்கொடுத்தோடச்செய்தல்,
  இராய-51
முதுவோர்-பெரிய மனிதர், இராய-115
முந்துற-விரைவாக, சூது-33
முந்தை-பெரியதந்தை, சூது-126,
  முதன்மை, சூது-147
முந்நீர்-கடல், இராய-100
முந்நூல்-பூணூல், சூது-278
மும்மடங்கு-மூன்றுமுறை, இராய-144
மும்மடி-மூன்றுபங்கு, சூது-85
மும்மதம், இராய-42
முரண்தொடை, இராய-113, 128, 131;
  சூது-116, 167, 199
முரண்முருக்குதல்-வலியழித்தல்,
  இராய-1