பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 439

முரணறுத்து-போர்
  செய்தலையொழிந்து, இராய-123
முரலுதல்-பாடுதல், சூது-59
முருகு-வாசனை, சூது-55
முழுதுணர்தல்-
  தேயமிடையிட்டவற்றையும்
  காலமிடையிட்டவற்றையும் அறிதல்,
  இராய-107
முளரி-தாமரை, சூது-135
முற்றுமோனை, சூது-96
முறைநிரனிறைப்பொருள்கோள்,
  இராய-43; சூது-231
முறையிலுயர்வுநவிற்சியணி, சூது-44
முறையிற்படர்ச்சியணி, சூது-215, 222
முன்-தமையன் (காலவாகுபெயர்),
  இராய-39, 123
முன்குலத்தவர்-அந்தணர், இராய-153
முன்றிலான்-வாயிலையுடையவன்,
  சூது-21
முன்னவன்-முதல்வன், சூது-275
முன்னுதல்-எண்ணுதல், சூது-274
முனிதல்-கோபித்தல், சூது-224
முனிவரர்-பிராமண சிரேஷ்டர்,
  இராய-16
முனை தள்ளுதல்-
  போரிற்கொன்றொழித்தல்,
  இராய-42
மூசுதல்-நெருங்குதல், மொய்த்தல்,
  சூது-113
மூரல்-புன்சிரிப்பு, சூது-13; பற்கள்,
  சூது-199
மூரி-வலிமை, சூது-79
  மெத்து இசை-மிக்க கீர்த்தி,
  [வினைத்தொகை], இராய-48
மெய்த்த வாததேர்,
  இல்பொருளுவமை, சூது-177
மெய்பனித்தல்-உடம்பு நடுங்குதல்,
  சூது-194
மேகலை-மாதரிடையில் அணியும்
  எழுகோவையணி, சூது-119
மேதினி-பூலோகம், இராய-31
மேருவின் முக்குவடு வாயுபறித்தமை,
  இராய.25
மேவலன்-பகைவன், இராய-26
மேவரு-விரும்புகிற, சூது-21
மேவி-விரும்பி, சூது-74
மேவார்-பகைவர், சூது-218
மேழி-கலப்பை, சூது-256
மேற்குத்திக்குப்பாலகன் வருணன்,
  இராய-52
மேன்மேலுயர்ச்சியணி, சூது-85
மைத்துனராமுறை, சூது-261
மைப்பொழுது-இராக்காலம், இராய-
150
மொட்டு-கொடிஞ்சி யென்னும்
  தேருறுப்பு, சூது-108
மொத்துதல்-அடர்த்தல், இராய-46
மொழிமாற்றுப் பொருள்கோள்,
  சூது-55
மௌலி - கிரீடம், சூது-42
யா-அஃறிணைக்பன்மை
  வினாப்பெயர், இராய-101
  யாகசாலை அமைக்கப்பட்ட
விதம்,
  இராய-91
யாகசாலை சத்தியலோகம் போலவும்,
  விஷ்ணு லோகம் போலவும் 
  இருந்தது, இராய-92, 93
யாகசேனன்-பாஞ்சால தேசத்தரசன்;
  துருபதன், இராய-152
யாகபத்தினி, சூது-89
யாணர்-புதுமை [உரிச்சொல்], சூது-
132
யாதவன்-கிருஷ்ணன், இராய-19
யாய்-தாய், சூது-133, 136, 156
யாளி-சிங்கம், இராய-23
யாளியாசனம்-சிங்காதனம், சூது-173
யானம்-வாகனம், இராய-43
யானை எல்லா வுறுப்புக்களானும்
  பொருதொழில் புரிதல், சூது-79
யானைகள் ஏழுறுப்பு உறத்தாழ்ந்த,
  சூது-79
யானைகள் முத்திறத்தன, சூது-79
யானையின்மதநீரில் வண்டு
  மொய்த்தல், சூது-91