பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 441

 வாரிதி-கடல், இராய-16, 123;
  சூது-102
வாவியின் உடம்பு, சூது-54
வாவுதல்-தாவிச்செல்லுதல், சூது-46
வாழ்வு-வாழுமிடம், இராய-92; வாழ்த்து, சூது-58
வாள்-ஒளி [உரிச்சொல்], ஓர் ஆயுதம்,
  இராய-26
வாளி-அம்பு, பாணம், சூது-77, 245;
  மண்டலகதி, சூது-121
வாளியின்வருபரிமா, சூது-100
வான்-பரமபதம் குறித்தது, இராய-137
வானதி-வான்நதி, ஆகாச கங்கை,
  சூது-86
வானவர்தச்சன்-விசுவகர்மா,
  இராய-69
விசயகம்பம்-வெற்றித்தூண்,
  இராய-48
விசயம்-வெற்றி, இராய-16
விசாரம்-ஆலோசனை, சூது-43
விசை-வேகம், இராய-45
விடலை-ஆண்பாற் சிறப்புப்பெயர்,
  சூது-110
விடுதி-சிலநாள் தங்கும் இடம்,
  சூது-165
வித்தகம்-அறிவு, சூது-150
வித்தரம்-அகலம், இராய-8
விதரணவினோதன்-ஈகையைப்
  பொழுதுபோக்காகவுடையவன்,
  கர்ணன், சூது-7
விதலை-நடுக்கம், இராய-26
விதி-பிரமன், இராய-94
விதியணி, சூது-73
விது-சந்திரன், இராய-19
விதூரன்=விதுரன்-நீட்டல் விகாரம்,
  சூது-183
விந்தம்-விந்தியமலை, இராய-22
விந்து-துளி, சூது-117
விந்தை-வீரலட்சுமி, துர்க்கை,
  சூது-147
விபினம்-காடு, தபோவனம்,
  இராய-151
விபுதர்-முக்தர்கள், சூது-284


விமலன்-குற்றமற்றவன், திருமால்,
  இராய-145
வியன்-விசாலமான, பெரிய,
  இராய-64
வியாதன்-வியாசன், (வேதங்களை)
  வகுத்தவன் என்பது பற்றி வந்தது,
  இராய-94
விரகிலாவுணர்வு-
விபரீதஞானமில்லாத
  உண்மையறிவு, இராய-149
விரகு-கபடம், வஞ்சனை, இராய-149,
  சூது-165; உபாயம், சூது-49;
  தந்திரம், சூது-70, 264
விரசுதல்-நெருங்குதல், இராய-17
விரித்தல்விகாரம், சூது-182
விரிவிலாமனம், சூது-43
விரை-வாசனை, இராய-74; சூது-190
வில் இடை-விற்கிடைதூரம், சூது-8
விலங்கல்-விலக்கல், இராய-143
விலாசம்-உற்சாகம், சூது-105;
  விநோதம், விளையாட்டு, சூது-161
விழிசிவத்தல் கோபக்குறி, இராய-21
விற்குறி-வில்லின் தழும்பு, இராய-18
வினவுதல்-வியந்து கூறுதல் என்ற
  பொருளில் வந்தது, சூது-157
வினாவும் விடையுமாகிய இரண்டு
வாய்பாட்டாலும் கூறுதல், சூது-65
வினைஞர்-தொழிலாளர், ஏவலாளர்,
  சூது-63
வீதிபோக்கி-ஒழுங்குபட நிறுத்தி,
  இராய-6
வீமன் சதகோடி யானை வலிமையுடையவன், இராய-15
வீமனது கோபத்திற்குக் கொதிக்கும்
  நெய் உவமை, சூது-256
வீவு-அழிவு, நாசம், சூது-180
வீறுகோளணி, சூது-45
வெண்சாமரங்களுக்கு நிலாத்தொகுதி
  ஒப்பு, சூது-78