(இ-ள்.)'நீபுரி தவம் பயன் - நீ செய்த தவத்தின்பிரயோசனம், நீடு வாழி - பலகாலம் (அழிவில்லாமல்)வாழ்வதாக;சாபம்உம் - (உனது) வில்லும், தூணிஉம் - அம்பறாத்தூணீரமும்,சரம்உம் - அம்பும், வாழி - வாழ்வனவாக;தீபம் மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் - விளக்கினது உண்மையான பிரகாசத்துடனே (தன்னொளிக்குஒப்பாகாதென்னுங்கருத்தால்) நெருங்கிப் போர்செய்கின்ற, மா பெரு நீலம் மெய் - அழகிய பெரிய நீலநிறமான (உன்)உடம்பு, வாழி வாழி - நன்கு வாழ்வதாக';(எ-று.) பின் இரண்டடிக்கு - விளக்குப்போல ஒளிவடிவமான பரமசிவத்துடனே நெருங்கிப் போர்செய்த மிகவும் சிறந்த நீலரத்தினம் போன்ற உன்மேனி மிக வாழ்க என்றும் பொருள் கொள்வர். வாழி வாழி, அடுக்கு - மகிழ்ச்சிபற்றியது. நீடு - நீண்டகாலத்துக்கு முதனிலைத் தொழிலாகுபெயர்: வினைமுதற் பொருள் விகுதி புணர்ந்த கெட்ட தெனினுமாம்; வினைப்பகுதி வினையுரியாய், நீடியதாக என்னும் பொருள்பட்டு நின்றதெனினுமாம்; நீண்டு என்பதன் விகாரமாகவுமாம். (132) 133. | என்றுகொண்டிணையடியிறைஞ்சுமைந்தனைத் தன்றிருத்தேரின்மேற் றாழ்ந்தகைகளால் ஒன்றியவுவகையோடேற்றியும்பர்கோன் சென்றனன்றன்பெருந்தெய்வவானமே. |
(இ-ள்.)என்றுகொண்டு - என்று சொல்லிக்கொண்டு,- உம்பர்கோன் - தேவேந்திரன்,-இணைஅடி இறைஞ்சும் மைந்தனை- (தனது) உபயபாதங்களைவணங்குகிற புத்திரனான அருச்சுனனை,- தாழ்ந்த கைகளால் - (தனது)தாழ்ந்து தொங்குங் கைகளால்,-தன்திரு தேரின்மேல் - தனது அழகிய தேரில், ஏற்றி-(எடுத்து)ஏறவிட்டுக்கொண்டு,-ஒன்றிய உவகையோடு - பொருந்திய மகிழ்ச்சியுடனே,- தன் பெரு தெய்வம் வானம் - தனது சிறந்த தெய்வத்தன்மையுள்ள சுவர்க்கத்துக்கு, -சென்றனன் - போனான்;(எ-று) தாழ்ந்த கைகள் -முழங்காலளவும் நீண்டு தொங்குங் கைகள்: ஆஜாநுபாகு: இது, உத்தமபுருஷ லக்ஷணம். சுவர்க்கத்துக்குத் தெய்வத்தன்மை - புண்ணிய மிகுதியாலடைய வேண்டியதாதலும், இன்பத்தையே நுகருமிடமாதலும் முதலியன. வான் - இடவாகுபெயர்: அம்- சாரியை. (133) 134.-தேரின்மீதுஇந்திர அருச்சுனர் விளங்கியதன் வருணனை. ஒருபெருமாதலி யூருந்தேரின்மேல் இருமரகதகிரி யிருந்தவென்னவே மருவருகற்பக மாலைமௌலியும் விரிபுகழ்மைந்தனும் விளங்கினாரரோ. |
|