பக்கம் எண் :

102பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)எண்ண அரு-நினைத்தற்கும்அருமையான (சிறப்பையுடைய),
மகபதி இருந்த மா நகர்-யாகங்களுக்குத் தலைவனானஇந்திரன் அரசு
வீற்றிருந்த பெரிய அந்நகரம்,-விண்ணவர்முனிவர் உள் விளங்கி வாழ்
தலால்-தேவர்களுடையவும் முனிவர்களுடையவும் மனத்தில் எழுந்தருளி
வாழ்தலாலும் [தேவர்களும்முனிவர்களும் தன்னுள்ளே விளங்கிவாழப்
பெறுதலாலும்],நண்ணிய முடி பெயர் நாகம் பூணலால்-பொருந்திய (தனது)
திருமுடியிலே ஊர்ந்து செல்லுதலையுடையசர்ப்பங்களைஆபரணமாக
அணிதலாலும் [பொருந்தியகோபுரசிகரத்தையும் நாகமென்னும் பெயரையும்
(தான்)கொண்டிருத்தலாலும்],புண்ணியன் வடிவு என பொலிந்து இலங்கும்-
பரிசுத்தனானசிவனது திருமேனிபோல அழகுடையதாய் விளங்கும்;(எ-று.)

     சிவபெருமான்திருமேனிபோலும் அமராவதிநகர மெனச்சிலேடை
மூலமாகப் பொதுத்தன்மை யமைத்துக் கூறியதால், இச்செய்யுள்-செம்மொழிச்
சிலேடையணியை யங்கமாகக் கொண்டு வந்த உவமையணி.  உள்-மனம்,
உள்ளிடம்: முடி-சிரசும் கோபுரமும், நாகம்-பாம்பும் சுவர்க்கமும்.  நாகம்
என்பது சுவர்க்கலோகத்துக்கு ஒரு பெயர்: அது-துக்கமற்றிருப்பது என்று
காரணப் பொருள்படும்.                                     (136)
    

137.மாவலிசிறைப்பட வைத்ததாண்மலர்
தாவியவிண்ணிடைத் தயங்குபொன்னகர்
தேவருந்தொழுகழற் றேவனுந்தியம்
பூவிருந்ததுவெனப் பொலிந்துதோன்றுமால்.

     (இ-ள்.)மா வலி - மகாபலிசக்கரவர்த்தி, சிறை பட-சிறைச்சாலையில்
தங்கும்படி, வைத்த-(அவனதுதலையின்மேல்)வைத்த,தாள் மலர் -
(திருமாலினது)தாமரைமலர்போன்ற திருவடி, தாவிய-மேலோங்கியளந்த,
விண்ணிடை-மேலுலகத்திலே, தயங்கு-விளங்குகிற, பொன் நகர்-
பொன்மயமான அமராவதி நகரமானது,-தேவர்உம்தொழு கழல் தேவன்-
தேவர்களும் வணங்குகின்ற திருவடியையுடைய சிறந்ததேவனான
திருமாலினது, உந்தி அம் பூ-அழகிய நாபீகமல மலர், இருந்தது என-இருந்த
தன்மைபோல, பொலிந்து தோன்றும்-அழகுபெற்று விளங்கும்;(எ-று.)

     பொன்னகர்திருமாலினுந்தித் தாமரைபோலப் பொலிவுபெற்றுத்
தோன்று மென்க.  பலிசக்கரவர்த்தியென்னும் அசுரராசன் தன்
வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் ஜயித்து மூவுலகங்களையும்
தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அவர் குள்ளவடிவமான
வாமனாவதாரமெடுத்துக் கசியப முனிவருக்கு அதிதியினிடந்தோன்றின
பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி, யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங்கொடுத்து வந்த அப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத்
தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன்