விளங்குகிற கூந்தலையுடையவளே!குழல் நிகர் ஆகிய மொழியாய்- வேய்ங்குழலினிசையையொத்து(ச்செவிக்கு மிக) இனிய சொற்களையுடையவளே! வந்து உற்றது-(நீ) இப்பொழுது (இங்கே) வந்து சேர்ந்தது, என் - யாதுகாரணத்தால்?'என-என்றுசொல்லி, அன்னைமலர் தாள்களில் - (தனது குருகுலத்துக்கு) மாதாவாகிய அந்த ஊர்வசியினது தாமரைமலர்போன்ற பாதங்களில், வீழ்ந்தான் - விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ்செய்தான், (அருச்சுனன்); ஊர்வசிதன்னிடம்வந்த காலத்தைக்கொண்டும் இங்கிதம் முதலியவற்றைக்கொண்டும் அவளுள்ளக்கருத்தைத் தான் அறிந்தும், அதனைமறுத்தற்பொருட்டு இங்ஙனந் தாய்முறை கூறி வணங்கி வினாவினனேயன்றி, அருச்சுனன் அவளெண்ணத்தையுணராதவனல்ல னென்க. சந்திரனதுமைந்தனாகியபுதன் இளையினிடத்துப்பெற்ற புதல்வனாகியபுரூரவனென்பவன், பூஞ்சோலையில்விளையாடிக்கொண்டிருந்த தேவமாதர்களுள் ஊர்வசியை அசுரர்கள் கவர்ந்து செல்லுகையில், அவள்முறையிட்டதைக் கேட்டு, தேரேறிச்சென்றுபொருது அசுரர்களைவென்றுஅவளைமீட்டு வந்து, பின்பு இந்திரன் தூதனுப்பியதனால் அவளை மணஞ்செய்து கொண்டு ஆயுவென்னுங்குமாரனைப்பெற்றானென்பது,கீழ்க்குரு குலச்சருக்கத்தில் வந்துள்ள கதை. தளவம்-முல்லை;மலருக்கு, முதலாகுபெயர். கொந்து- கொத்துஎன்பதன் மெலித்தல். குழலெனும் வாத்தியத்தின்பெயர் அதனொலிக்குஆயிற்று. (160) 161.-இதுமுதல்நான்குகவிகள் - ஊர்வசி சினந்து அருச்சுனனையேசிப் பேடியாகுமாறு சபித்துச்சென்றதைக் கூறும். இவ்வாறிவனவடாள்களி றைஞ்சிப்புறநின்றான் மெய்வாய்மையினுயருந்தவ விபுதாதிபர்மகளும் செவ்வாயிதழ்மடியாவிழி சிவவாமதிகருகா வெவ்வாளரவுமிழுங்கடு விடநேர்மொழிபகர்வாள். |
(இ - ள்.) இஆறு-இந்தவிதமாக, இவன் - அருச்சுனன் அவள் தாள்கள் இறைஞ்சி-ஊர்வசியினது பாதங்களைவணங்கி புறம் நின்றான்- பின்னே விலகிநின்றான்:மெய் வாய்மையின் உயரும் தவம் விபுத அதிபர் மகள்உம்-தவறாதசத்தியத்துடனே மேலான தவத்தைச்செய்துவந்த தேவர்களுக்குத் தலைவரானநாராயண முனிவரது குமாரியான ஊர்வசியும், (கோபமிகுதியால்), செம் வாய் இதழ் மடியா-சிவந்த வாயின் உதட்டை மடித்துக்கொண்டு, விழி சிவவா-கண்கள் சிவந்து, மதி கருகா-அறிவு வெதும்பி,-வெவ்வாள் அரவு உமிழும் கடு விடம் நேர் மொழி பகர்வாள்- பயங்கரமான வாளாயுதம்போலக்கொடுமையான நாகம் உமிழ்கிற கடுமையான விஷத்தையொத்த வார்த்தைகளைச்சொல்லுபவளானாள்;(எ-று)- அவ்வார்த்தைகளைமேலே மூன்று கவிகளிற் காண்க. மூன்றாமடியில்,சிவவா, கருகா-முரண்தொடை. மெய் வாய்மை - கோபித்துச் சபித்தாலும் அருள்கொண்டுஅனுக்கிரகித்தாலும் |