பக்கம் எண் :

120பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)கதிர் உதித்த அ காலையில்- சூரியன் உதயமான
அந்தக்காலத்தில், புதல்வன் உற்றது உணரான் புரந்தரன் - (தன்)
புத்திரனாகியஅருச்சுனன் (பேடித்தன்மையை) அடைந்ததை
அறியாதவனாகிய இந்திரன், மா மறை முதல்வர் - சிறந்த வேதங்களுக்குத்
தலைவர்களாகியமுனிவர்களும், முப்பத்துமூவர்உம்-முப்பத்து மூன்று
தேவர்களும், சூழ்வர - (தன்னைச்)சுற்றிலும்வரும்படி, விதம் மணி பணி
மண்டபம் - பலவகைப்பட்ட இரத்தினங்களைப்பதித்துச்செய்த
சித்திரவேலையையுடைய(சுதர்மையென்னுந்) தேவசபாமண்டபத்தை,
மேவினான்- அடைந்தான்;(எ - று.)

    முப்பத்துமூவராவார் - ஆதித்தர்பன்னிருவரும், உருத்திரர்
பதினொருவரும்,வசுக்கள்எண்மரும், அசுவினீதேவர் இருவருமாம்.
முதல்வர் முப்பத்துமூவர்எனின், - இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
முப்பத்துமூவர் - உம்மைத்தொகை:தொகைக் குறிப்பு.

     இதுமுதற்பத்துக்கவிகள் - இச்சருக்கத்தின் நான்காங்கவி போன்ற
கலிவருத்தங்கள்.                                        (167)

168.-அருச்சுனனையழைத்துவருமாறு இந்திரன் ஒரு
கந்தருவனையேவுதல்.

கண்பரப்பியொர் கந்தருவன்றனை
விண்புரக்குமவ் வேந்தனிருந்தபின்
மண்புரக்கும் வரிசிலைவீரனை
எண்பெறக்கொணர் வாயெனவேவினான்.

     (இ-ள்.) விண்புரக்கும் அ வேந்தன் - சுவர்க்கலோகத்தையாளுகின்ற
அந்த இந்திரன், இருந்த பின் - (தனக்குரிய சிங்காதனத்தில்)
வீற்றிருந்தவுடனே, ஒர் கந்தருவன்தனை- கந்தருவனொருவனைகண்
பரப்பி - கண்ணைப்பரக்கவிழித்துக்குறிப்பாய் நோக்கி, மண் புரக்கும் வரி
சிலைவீரனைஎண் பெற கொணர்வாய் என - நிலவுலகமுழுவதையும்
காத்தற்குரிய கட்டமைந்த வில்லின் தொழிலில்வல்ல வீரனாகிய
அருச்சுனனைக்கௌரவமாக அழைத்து வருவாயாகவென்று, ஏவினான்-
கட்டளையிட்டான்;

     "கண்ணிற்சொலிச்செவியினோக்குமிறைமாட்சி"என்ப ஆதலால்,
'கண்பரப்பியேவினான்'எனப்பட்டது.  வேந்தன்-தேவேந்திரன் என்பதன்
முதற்குறைபோலும்:வேந்தனென்பது இந்திரனென்னும் பொருளில் வருதலை
'வேந்தன்மேயதீம்புனலுலகம்"எனத் தொல்காப்பியத்திலும், "வேந்தனும்
வேந்துகெடும்"என்ற திருக்குறளிலும் காண்க.                 (168)

169.-சென்றகந்தருவன் அருச்சுனனிடங்குறுகி
அவனுக்கு உற்றனஉணர்ந்து இந்திரனிடம் தெரிவித்தல்.

மற்றவன்றிருத் தாண்மலர் போற்றியக்
கொற்றவன்றிரு முன்னர்க் குறுகியாங்கு
உற்றயாவு முணர்ந்தனன் மீண்டுபோய்ச்
சொற்றனன்சுரர் கோமுன் றொழுதரோ.