ளும் ஆகாததால், இது- வேற்றுப்பொருள்வைப்பணி யன்று. வாகுபூதரம் என்ற தொடரை-தோள்களாகிய மலைகள்என உருவகமாக்கி உரைத்தற்கு இங்கே இயைபின்று. (மேலுங்கீழும் வளர்ந்துநின்று) பூமியைத் தாங்குவதுபற்றி, பூதரம் என்று மலைக்குக்காரணப்பெயர். 'உருவொன்றும் மதன்'என்றது - பரமசிவனது நெற்றிக்கண்ணின் நெருப்பினால்உடம்பு எரிக்கப்பட்டு அழிந்து அனங்கனாதற்குமுன்னேஅங்கத்தோடு கூடியுள்ள மன்மதனை;பின்பு அங்கத்தோடுகூடிவந்த மன்மத னென்றால்,இல் பொருளுவமை;இனி உருஒன்றுஉம் மதனைஒப்பான் என்பதற்கு - ரூபமொன்று மாத்திரத்தால் மன்மதனையொப்பவன் என்று உரைத்து, வில்லின்தொழிலில் அவனினும் மிக்கவனெனக் கருத்துக்கொள்ளுதலும் அமையும். மதன்=மதநன் அல்லது மந்மதன். ஒருப்படுதல் - உடன்படுதல். வண்மையாவது - ஏற்றார்க்குமாற்றாதுவரையறையின்றிக் கொடுத்தல். ஒருகாலத்தில்திருக்கைலாயத்திற் பரமசிவனார்சனகர் முதலிய நால்வர்க்கு யோகநிலைமையைஉணர்த்துதலின் நிமித்தம் தாம் யோகஞ்செய்துகொண்டிருந்தார். அப்போது பிரமனேவலால் மன்மதன் மலரம்புகளைஎய்து அக்கடவுளின் தவத்தைக் கெடுக்கலுற்றான். அக்கடவுள் சினந்து நெற்றிக்கண்ணைவிழிக்க, அந்த மன்மதன் அதன் நெருப்புக்கு இரையாய் உடம்பு எரிந்து சாம்பரானானென்பதும்: உடனே மன்மதன் மனைவியாகியரதீதேவி தன் கணவன் எரிக்கப்பட்டதனால் மிகவருந்திச் சிவபிரானைஅடைந்து பிரார்த்திக்க, அவர் அவளுக்குமாத்திரம் ரூபமுடையவனாகவும்மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்இருக்கும்படி அருள்செய்தனரென்பதும் புராண கதைகள். (193) 18.-இதுவும்,மேற்கவியும் - குளகம்:அருச்சுனனுக்குப் போர்க்குவேண்டுவன தந்து இந்திரன் விடைகொடுத்துப் பொருதற்கு அனுப்புதலைக்கூறும். காற்றெனக்கடியவேகக் கனலெனக்கொடியவென்றும் மேற்றிசையெல்லையெல்லாம்வீதிபோயொல்லைமீள்வ கூற்றமுமுகிலுமுட்கக் குமுறும்வெங்குரலுமென்மேற் சீற்றமுந்திறலுமிக்க தீக்கதிசெலாததூய. |
(இ-ள்.)காற்று என கடிய - காற்றுப்போல வேகமுள்ளவையும், வேகம் கனல் என கொடிய - உக்கிரமாக அக்கினிபோல(ப் பகைவர்களை யழிக்குங்) கொடுந்தன்மையுள்ளவையும், என்றுஉம் - எப்பொழுதும், மேல் திசை எல்லைஎல்லாம் - ஆகாயமாகிய திக்கின் இடம்முழுவதிலும், வீதிபோய் - ஒழுங்காகச்சென்று, ஒல்லை-விரைவில்,மீள்வ - திரும்புவனவும், கூற்றம்உம் முகில்உம் உட்ககுமுறும் வெம் குரல்உம் - (யாவர்க்கும் பயங்கரனான)யமனும் (இடியிடிக்கின்ற) மேகமும் அஞ்சும்படி கனைக்கின்றகொடிய கண்டத் தொனியிலும், மெல்மேல் சீற்றம்உம்- மேலேமேலே அதிகப்படுகின்ற கோபத்திலும், திறல்உம் - பலத்திலும், மிக்க- மிகுந்துள்ள |