தோண்டிய அப்பள்ளமேநீரால்நிறைந்து கடலாகிச் சாகரமெனப் பெயர் பெற்றதென்றுங் கூறப்படுங் கதையையுட்கொண்டு, 'தொடுகடல்' எனப்பட்டது. சித்திரசேனன் - அருச்சுனனுக்குத் தேவலோகத்திலே சங்கீதவித்தை பயிற்றுவித்த ஆசிரியன். (198) 23.-'தேவர்களால்வெல்லமுடியாத அசுரரை ஒருநரன் வெல்லவல்லனோ?'என்று வானவமகளிர் சிரித்தல். மொய்திறற்கடவுளோர்முப் பத்துமுக்கோடியாலும் செய்தமர்தொலைக்கவொண்ணாத்தெயித்தியர்சேனைதன்னை எய்தொருமனிதன்வெல்வ தேழைமைத்தென்றுநக்கார் மைதவழ்கருங்கட்செவ்வாய் வானவமகளிரெல்லாம். |
(இ-ள்.)'மொய்திறல் - மிகுந்த வலிமையையுடைய, கடவுளோர் முப்பத்துமுக்கோடியால்உம்-முப்பத்துமுக்கோடி தேவர்களாலும், அமர்செய்து தொலைக்கஒண்ணா-போர்செய்துஅழிக்க முடியாத, தெயித்தியர் சேனை தன்னை-அசுரர்களுடையசேனையை,ஒரு மனிதன் - (சேனாபலமில்லாமல் தனியனான)மனிதனொருவன்,எய்து - அம்பெய்து, வெல்வது-சயிக்க முயல்வது, ஏழைமைத்து-அறிவில்லாமையையுடையது,'என்று - என்று சொல்லி, மைதவழ் கரு கண் - மைபொருந்திய (இயற்கையிற்) கருமையான கண்களையும்,செவ் வாய் - சிவந்த வாயையுமுடைய, வானவ(ர்) மகளிர் எல்லாம்-தேவமாதர்களெல்லாரும், நக்கார்-சிரித்தார்கள்;(எ-று.) முப்பத்துமுக்கோடி - மூன்றாகியபத்தும், அதனோடுகூடிய மூன்றுமாகிய கோடியென்க. முப்பத்து முக்கோடியாவார்-ஆதித்தியர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,வசுக்கள் எண்மரும், அசுவினீதேவர் இருவரும் ஆகிய முப்பத்துமூவரையுந் தலைவராகக் கொண்டு அத்தனைகோடியாக உள்ளவர்கள். தெயித்தியர் - தைத்யர் என்பதன் விகாரம்: (காசியபமுனிவரது மனைவிமார்களுள்)திதி என்பவளது மக்களென்று பொருள். ஏழைமைத்து - ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை - அஞ்சனம். கருங்கட் செவ்வாய் - முரண்டொடை. (199) 24.-கோபுரவாயிலில்அருச்சுனன் வருகையில் தேவேந்திரனென்றுதேவர்கள் திரளுதல். மங்கையர்வாய்மைகேட்டு மணிக்குறுமுறுவல்செய்து கங்கையம்பழனநாடன் கடிமதில்வாயில்செல்ல அங்கவன்றன்னைக்கண்டவணிகழலமரரெல்லாம் மங்குல்வாகனனென்றெண்ணிக் கதுமெனவந்துதொக்கார். |
(இ-ள்.)கங்கை அம் பழனம் நாடன் - கங்காநதியின் நீர் பாய்கின்ற கழனிகளையுடையகுருநாட்டையுடையவனாகியஅருச்சுனன்,-மங்கையர் வாய்மை கேட்டு-(அவ்வாறு சொல்லிச் சிரித்த) தேவஸ்திரீகளின் வார்த்தையைச் செவியுற்று, மணி குறு முறுவல்செய்து - அழகிய புன்சிரிப்பைச் செய்து, கடி மதில் வாயில் |