செல்ல - காவலையுடையமதிலினிடையேயுள்ள கோபுரத்துவாரத்திற் சென்றுசேர,-அங்குஅவன் தன்னைகண்ட-அவ்விடத்திலே அவனைப் பார்த்த, அணி கழல் அமரர் எல்லாம் - (காலில்)தரித்த வீரக்கழலையுடைய தேவர்களெல்லோரும், மங்குல் வாகனன் என்று எண்ணி-(அவனை) மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனென்றே நினைத்து,கதுமென வந்து தொக்கார் - விரைவிலே (அருகில்) வந்து கூடினார்கள்;(எ-று.) வடிவொப்பமையினாலும்,மாதலி தேரூர அவ்விந்திரன் தேர் மீது செல்லுதலாலும் தேவர்கள் மங்குல்வாகனனென்று கருதினர்: இது, மயக்கவணி. கங்கையம்பழனம், அம்-நீர்;இனி, கங்கை பாயப்பெற்ற அழகிய கழனி யென்றுமாம். மங்கையர்-இளம்பருவமுடைய மகளிர்: மங்கைப் பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும். வாய் - அதிலிருந்து வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்:மை - பகுதிப் பொளுணர்த்தும் விகுதி. முறுவல் - சிரிப்பு: தன்னைப்பிறர் இகழ்ந்தமை காரணமாக உண்டாயிற்று. மணிக் குறுமுறுவல் செய்து - முத்துப்போலப் புன்சிரிப்புச்செய்து என்றுமாம்;சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது வெளித் தோன்றுவதால். குருநாட்டின் எல்லை,கங்காநதி வரையிலும்போலும். கடி - பலபொருளுணர்த்தும் உரிச்சொல். இல்வாய் என்பது வாயில் என மாறியது: இலக்கணப் போலி. இங்கே, நகரத்துவாயில். அணி கழல் - அழகுசெய்யுங்கழலெனவுமாம். கழல் - வீரர்காலணி: இந்திரனுக்கு மேகம் வாகனமென்பது, கவிமரபு. கதுமென - விரைவுக்குறிப்பு. (200) 25.-தேவர்கள்வினாவ,அருச்சுனன் போர்க்கோலங் கொண்டகாரணத்தை மாதலி கூறுதல். கார்க்கோலமேனியானைக்கண்டபினையநீங்கிப் போர்க்கோல மிவனுக்கெவ்வா றிசைந்ததுபுகறியென்று தேர்க்கோலஞ் செய்வான்றன்னைச்செப்பினரவனும்போற்றி வார்க்கோலபுரத்துவைகு மவுணரைவதைத்தற்கென்றான். |
(இ-ள்.)(அங்ஙனம்வந்து தொக்க தேவர்கள்),-கார்கோலம் மேனியானை- காளமேகம்போன்ற அழகிய திருமேனிநிறத்தையுடைய அருச்சுனனை,கண்ட பின் - (அருகிற்) பார்த்தபின்பு, ஐயம் நீங்கி - (இந்திரனோஎன்று கீழ் நிகழ்ந்த) சந்தேகம் ஒழிந்து, 'இவனுக்கு- இவ்வருச்சுனனுக்கு, போர் கோலம் - யுத்தத்திற்கு உரிய அலங்காரம், எ ஆறு இசைந்தது-யாது காரணமாகப் பொருந்திற்று? புகறி - சொல்வாய்', என்று-,தேர் கோலம் செய்வான்தன்னை- தேருக்கு உரிய அலங்காரத்தைச் செய்பவனாகியமாதலியைநோக்கி, செப்பினர் - வினாவினார்கள்;அவன்உம் - அந்த மாதலியும், போற்றி - (அருச்சுனனது சிறப்பை யெடுத்துப்) புகழ்ந்து, வார் கோலம் புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான்-நீரிடையேயுள்ளஅழகிய தோயமாபுரத்தில் வாழ்கின்ற |