அசுரர்களைக்கொல்லுதற்பொருட்டு (அமைந்தது) என்று கூறினான்;(எ-று.) "சேயிருவிசும்பிடைத்திரியுஞ்சாரணர், நாயகனிவன்கொலென்றயிர்த்து நாட்டமோ, ராயிர மில்லையென்றைய நீங்கினார்" என்றார் கம்பராமாணத்தும். போற்றி-தேவர்களைவணங்கி என்றுமாம். தேர் கோலம் செய்வான் - தான் முன்னிடத்திலே சாரதியாக வீற்றிருத்தலால் தேருக்கு அழகுசெய்து நிற்பவனென்றுமாம். (201) 26.-பகையைவிரைவில்வென்று மீளுமாறு தேவர்கள் அருச்சுனனைவாழ்த்திச் சன்மானித்து அனுப்புதல். என்றவனுரைத்தமாற்ற மின்புறக்கேட்டுநெஞ்சில் துன்றியவுவகைதூண்டச் சுருதியாலாசிசொல்லி வென்றுமீள்கென்றுவாழ்த்தி விரைவினில்வீரன்றன்னைச் சென்றிடுகென்றுதேவர் தத்தமிற்சிறப்புமீந்தார். |
(இ-ள்.)தேவர்-தேவர்கள்,-அவன் - மாதலி, என்று உரைத்த மாற்றம் - இவ்வாறு சொன்ன வார்த்தையை, இன்புஉற - (செவிக்கு) இன்பம் மிக, கேட்டு-,-நெஞ்சில்துன்றிய உவகை தூண்ட - மனத்திலே மிகுந்த மகிழ்ச்சி தூண்டுதலினால்,சுருதியால் ஆசி சொல்லி - வேதமந்திரங்களைக் கொண்டு (அருச்சுனனுக்கு) ஆசீர்வாதங்களைச்சொல்லி, வென்று மீள்க என்று வாழ்த்தி - (அசுரர்களைச்)சயித்துத் திரும்பிவருவாயாக என்று வாழ்த்துச் சொல்லி, வீரன் தன்னை- வீரனாகியஅவனை,விரைவினில் சென்றிடுக என்று - துரிதத்திற் புறப்பட்டுப் போவாயாக என்றுஞ் சொல்லி, தத்தமில் சிறப்புஉம் ஈந்தார் - தங்கள் தங்களுக்கு இயன்றவளவிற் சன்மானங்கள் பலவற்றையும் (அவனுக்குச்) செய்தார்கள்;(எ-று.) தம்பகைவர்களைவெல்லச் செல்லுகிறானென்றதனால்,நெஞ்சில் களிப்பு நிறைந்தது. 'தேவதத்தமுஞ்சிறப்பினீந்தார்'என்னும் பாடத்துக்கு- தேவதத்தமென்னுஞ் சங்கத்தையும் வெற்றிச் சிறப்புக்குத் துணைக்கருவியாம்படிதந்தார்கள் என்று பொருள்: இது, காண்டவதகனகாலத்து அக்கினி கொடுத்தது என்றலும் உண்டு. 27.-இதுவும்மேற்கவியும் - ஒருதொடர்:தேவர்கள் கூறுவது. சம்புவன்சம்புமாலி யெனும்பெயர்த்தனுசர்தம்மை உம்பர்கோன்வதைத்தவந்நா ளூர்ந்ததெவ்வுலகுமேத்தும் தும்பையஞ்சடையான்வெற்பைத் துளக்கியசூரன்மாள விம்பவார்சிலையிராமன்வென்றநாளூர்ந்ததித்தேர். |
(இ-ள்.) இதேர் (இப்பொழுது நீ ஏறியுள்ள) இந்த இரதம்,-சம்புவன் சம்புமாலி எனும் பெயர் தனுசர் தம்மை-ஜம்புவன் ஜம்புமாலி என்னும் பெயருள்ள அசுரரிருவரை, உம்பர் கோன் - மேலுலகத்துக்குத் தலைவனாகிய இந்திரன், வதைத்த அ நாள்- |