பக்கம் எண் :

148பாரதம்ஆரணிய பருவம்

கொன்றஅந்தக்காலத்தில், ஊர்ந்தது - ஏறியது;(அன்றியும்), எ உலகுஉம்
ஏத்தும் - எல்லாவுலகங்களிலு முள்ளவர்களுஞ் சிறப்பித்துக் கூறுகின்ற,
தும்பை அம் சடையான் - தும்பைப் பூவைச் சூடிய அழகிய சடையையுடைய
சிவபிரானது, வெற்பை - கைலாச கிரியை, துளக்கிய - அசைத்த, சூரன் -
வலியவனாகியஇராவணன், மாள - இறக்க, விம்பம் வார் சிலைஇராமன் -
வட்டமாக வளைந்தநீண்ட (கோதண்டமென்னும்) வில்லையுடையஸ்ரீராமபிரான்,
வென்ற நாள் - (அரக்கர்களைச்)சயித்த காலத்தில், ஊர்ந்தது-ஏறியது;(எ-று.)

     இதனால்அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த தேரினது சிறப்புக்குக்
கூறப்பட்டது.  தனுசர்=தநுஜர்: (காசியபமுனிவர் மனைவிமார்களுள்)தநு
என்பவளிடம் பிறந்தவரென்று பொருள்.  உம்பர் என்னும் மேலிடத்தின்
பெயர், அங்குள்ள உலகத்துக்கு இடவாகுபெயர்.  'எவ்வுலகுமேத்தும்'
என்னும் அடைமொழியைச் சடையானுக்காயினும், வெற்புக்காயினும்,
சூரனுக்காயினும், இராமனுக்காயினும் கூட்டுக.  சூரன் - ஸூரன் என்னும்
வடமொழித் திரிபு.  தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்
பெற்றவனென்பது, 'ராமன்'என்னுஞ் சொல்லுக்குப் பொருள்;சகல
சற்குணங்களும் பொருந்தினவ னென்பது கருத்து.  சிலைஎன்ற
அடைமொழி, கோடாலியை ஆயுதமாகவுடைய பரசுராமனையும்,
கலப்பையைப் படையாகக் கொண்ட பலராமனையும்பிரித்தது.

     பிரமனது கட்டளையால்இந்திரன், மாதலியுடனே தனது தேரை
அனுப்ப, தாசரதி அதன்மேலேறிக்கொண்டு, பொருது இராவணனை
வதைத்தானென்பது, ஸ்ரீராமாயணத்து யுத்த காண்ட வரலாறு. இராவணன்
குபேரனைவென்றுஅவனது புஷ்பகவிமானத்தின்மீது ஏறிக்கொண்டு
ஆகாயமார்க்கத்திற் கைலாசகிரியின் மேலாகச் செல்லும்பொழுது,
அதன்மகிமையால் தான் ஏறிவந்த விமானம் தடைப்பட்டு அசையாமல்
தம்பித்து நிற்க, அதன் காரணத்தை நந்திதேவர் சொல்லக் கேட்டும்
அடங்காமற் கோபித்துத் தசகந்தரன், செருக்கினால்தனதுபோக்குக்குத்
தடை செய்கின்ற கைலாசத்தை வேரோடு பறித்தெடுத்தெறிகிறேனென்று
சபதஞ் செய்து மலையடிவாரத்தில்தன் இருபதுபுயங்களையுங்கொடுத்து
அசைத்தான் என்பது, உத்தரராமாயண கதை.                     (203)

28.ஆதலாலித்தேர்மேல்கொண் டடல்புனையவுணருக்குப்
பேதியாக்கவசம்பெற்றுப் பிறங்குபொன்முடியும்பெற்றாய்
கோதிலாயெங்கணெஞ்சிற் குறையெலாந்தீர்த்தியென்றார்
போதில்வாழயனுமொவ்வா வாய்மொழிப்புலவரெல்லாம்.

     (இ-ள்.)ஆதலால் - ஆகையினால்,கோது இலாய் - குற்றமில்லாதவனே!
இ தேர் மேல் கொண்டு - இந்தத் தேரின்மேல் ஏறிக்கொண்டு, அடல்புனை
அவுணருக்கு பேதியா கவசம் பெற்று - வலிமைபொருந்திய அசுரர்களுக்குப்
பிளக்கமுடியாத கவசத்தையும் பெற்று, பிறங்கு பொன் முடிஉம் பெற்றாய் -
விளங்குகின்ற