பட்டது. தடந்தேர்- உரிச்சொற்புணர்ச்சி. தபனன்-தபிப்பவன்;தபித்தல் - சுடுதல். வான் - பெருமை யுணர்த்தும்பொழுது உரிச்சொல்;இனி, பெயர்ச்சொல்லாய், வானத்தையளாவுங் குன்றென்றுமாம். (205) வேறு. 30. | திரைகொ ழித்திடுஞ் சிந்துவின் சூழலில் குரக தத்தடந்தேர்போய்க் குறுகலும் மரக தக்கொண்டன்மாதலிக் கன்பினால் விரகு றச்சிலமாற்றம் விளம்பினான். |
(இ-ள்.)குரகதம் தட தேர் - குதிரைகளைப்பூட்டியுள்ள பெரிய அவ்விரதமானது, திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்-அலைகளை(க் கரையில்) மோதுகின்ற கடலையடுத்த இடத்திலே, போய் குறுகலும்-போய்ச் சேர்ந்தவளவில்,-மரகதம் கொண்டல் - பச்சையிரத்தினமும் காளமேகமும் போன்ற அருச்சுனன், மாதலிக்கு - தேர்ப்பாகனைநோக்கி, அன்பினால்- அன்புடனே, விரகு உற - அறியும்படி, சில மாற்றம் விளம்பினான்- சில வார்த்தைகளைக்கூறினான்;(எ-று.)-அது மேற்கவியிற் கூறுகிறார்; சூழல் -சூழ்ந்துள்ள இடம். குரகதம் - குளம்புகளால் நடப்பது என்று பொருள்;ஒற்றைக்குளம்புள்ளது என்று கருத்து. மரகதக்கொண்டல் என்ற தொடர்மொழி - உவமையாகுபெயராய் அருச்சுனனுக்கு வந்தது. அன்பினால்- மூன்றாமுருபு,அடைமொழிப் பொருளிலே வந்தது; அன்புடையவனாய்என்று கருத்து. இதுமுதல்இருபத்தேழு கவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஈற்றுச்சீர் விளச்சீரும், மற்றிரண்டும் மாச்சீரும் விளச்சீரும் விரவியும் வந்த அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். 31.-தோயமாபுரத்துஅவுணரியல்பைக் கூறுமாறு அருச்சுனன் வினவ,மாதலி கூறலுறல். இப்புரத்தி லவுண ரியல்பெலாம் செப்பெனக்குத் தெரிதர வென்றலும் அப்புரத்தவ ராண்மையுந் தோற்றமும் செப்பலுற்றனன் திண்டிறற் றேர்வலான். |
(இ-ள்.)'இபுரத்தில் அவுணர் இயல்பு எலாம் - இந்த நகரத்திலுள்ள அசுரர்களது தன்மை முழுவதையும், எனக்கு-,தெரிதர-விளங்கும்படி, செப்பு-சொல்வாயாக',என்றலும்-என்று (அருச்சுனன்) சொன்ன வளவில்,- அ புரத்துஅவர் ஆண்மைஉம்-அந்நகரத்திலுள்ள அவ்வசுரர்களது பராக்கிரமத்தையும், தோற்றம்உம்-காட்சியையும், திண் திறல் தேர்வலான் - மிகுந்த வலிமையையுடைய தேர்செலுத்துந் தொழிலில் வல்லவனாகிய மாதலி, செப்பல் உற்றனன்-சொல்லத்தொடங்கினான்;(எ-று.)-அது மேலெட்டுக்கவிகளாற் கூறுகின்றார். |