(இ-ள்.) கூரும்நல் உரை கூறின்உம் - மிக்க நல்ல வார்த்தைகளைச் சொல்வதானாலும்,கூற்றுடன் கார்தொறுஉம் இடி சேர்ந்து அன்ன காட்சியார் - யமனும் மேகந்தோறுந் தோன்றுகின்ற இடியுஞ் சேர்ந்தாலொத்த தோற்றமுடையவர்: தேர்தொறுஉம் செரு செய்யும் அ தேவரை- (தத்தமது) இரதங்களிலே (ஏறி வந்து) போர்செய்கின்ற அந்தத் தேவர்களை,போர்தொறுஉம் - ஒவ்வொரு யுத்தத்திலும், புறம் கண்டு அன்றி - முதுகுகாட்டியோடச் செய்தல்லாமல், போகலார் - (போர்க் களத்தினின்று மீண்டு) போகாதவர்;(எ-று.) நல்லசொற்சொல்லும்பொழுதும் கண்டத்தொனியால் யமனும் இடியுஞ்சேர்ந்த தொப்ப ரெனவே, தீயசொற் சொல்லும் பொழுது உள்ளதன்மை சொல்லவேண்டாதாயிற்று. அத்தேவர் என்றதில் அகரச்சுட்டு - அமிருதமுண்டதனால்அழியாவலிபெற்ற தேவர்களது சிறப்பை யுணர்த்திற்று:இனி, அழகிய தேவ ரெனினுமாம். பெரும்பாணுற்றுப்படையில் "அவ்வாய்வளர்பிறை"என்பதற்கு - 'அழகியஇடத்தையுடைய வளரும் பிறை'என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர்உரையெழுதிப்போந்ததனால் அம் என்பதற்குப்போல, அ என்பதற்கும் அழகிய என்னும்பொருள் உண்டென்று உணர்க. (213) 38. | மூன்றுகோடி யசுரர்முகிலெனத் தோன்றுமேனியர் தோமறுமாற்றலர் ஏன்றுபோர்பொரி னெவ்வெவ்வுலகையும் கீன்றுசேரக்கிழிக்குமெயிற்றினார். |
(இ-ள்.) மூன்றுகோடி அசுரர் - மூன்றுகோடி என்னுந் தொகையுள்ள அவ்வசுரர்கள், முகில் என தோன்றும் மேனியர் - மேகம்போல(ப் பெரிதாக)த் தோன்றுகின்ற உடம்பையுடையவர்;தோம் அறும் ஆற்றலர் - குற்றமில்லாத வலிமையுடையவர்;ஏன்று போர்பொரின்-எதிர்த்துப் போர் செய்தால், எ எ உலகைஉம் - எந்த எந்த உலகங்களையும்,கீன்று - கீறி. சேர - ஒருசேர, கிழிக்கும் - கிழிக்கவல்ல, எயிற்றினார்-பற்களையுடையவர்; (எ-று.) இங்கே,'முகிலெனத்தோன்றுமேனியர்'என்பது, கீழ் 32 - ஆம் கவியில் 'விண்முகிலைக்கவினழித்தமேனியர்'என்பதனோடுகூறியது கூறலென்னுங் குற்றமாகாமைப்பொருட்டு, அங்கே கருமைக்கும், இங்கே பெருந் தோற்றத்துக்கும் உவமைகூறியதென வேறுபாடுகொள்க. தோம்=தோஷம். ஆற்றல் - ஆற்று என்னும் பகுதியின் தொழிற்பெயர். ஏன்று, கீன்று-ஏல்,கீல்-பகுதிகள். ஏன்று என்பது, ஏற்றுஎனவும் வரும். கீலுதல்-கிண்டுதல், பிளத்தல். ஆற்றலுக்குக் குற்றமாவது, தோல்வி. (214) 39. | செப்புரத்தினிற் செஞ்சடைவானவன் முப்புரத்தை முனிந்தவந்நாளினுந் |
|