பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்155

 தப்புரத்தர் சதமகன்றன்னைவென்று
இப்புரத்தை யிவர்கவர்ந்தாரெனா.

இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்.

     (இ-ள்.)செப்பு-(யாவராலுஞ் சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற,
உரத்தினின்-வலிமையையுடைய, செம் சடை வானவன்-சிவந்த
சடையையுடைய சிவபெருமான், மு புரத்தை-திரிபுரத்தை, முனிந்த அ
நாளின்உம் - கோபித்து எரித்த அக்காலத்திலும், தப்பு-(தாம் எரியாமல்)
தப்பிப் பிழைக்கும்படியான, உரத்தர் - வலிமையுடையவர்களாகிய, இவர்-
இவ்வசுரர்கள், சதமகன் தன்னைவென்று-இந்திரனைச்சயித்து, இ புரத்தை-
இந்தத் தோயமாபுரத்தை, கவர்ந்தார்-(அவனுடைய ஆளுகையினின்றும்)
அபகரித்துத் தமதாக்கிக் கொண்டார்கள், எனா-என்று(அருச்சுனனுக்குச்)
சொல்லி,-(எ-று.)-இக்கவியில்'எனா'என்பதும், மேற்கவியில் 'போக்கி'
என்பதும், அதன் மேற்கவியிலுள்ள 'நடத்தினன்'என்னும் வினைமுற்றைக்
கொண்டு முடியும்.

     ஸ தமகன்-நூறு(அசுவமேத) யாகங்களைச்செய்து இந்திர பதவி
பெறுதலால் வந்த பெயர்;சதம்-நூறு, மகம்-யாகம்.               (215)

40.-அருச்சுனனோடுபொரவருமாறு மாதலி
அவ்வசுரரிடத்துச்சித்திரசேனனைத்தூதனுப்புதல்.

தீதிலாத்திறற் சித்திரசேனனைக்
கோதிலாத குனிசிலைவீரற்கு
மோதுபோர்தர மொய்ம்புடைவஞ்சர்பால்
தூதுபோகெனப் போக்கித்தொலைவிலான்.

     (இ-ள்.) தொலைவுஇலான் - (போருக்குத் தேர்செலுத்துவதாகிய
தன்தொழிலிற் சிறிதுங்) குறைவுபடுதலில்லாத மாதலி,-தீது இலா திறல்
சித்திரசேனனை- குற்றமில்லாத வலிமையையுடைய சித்திரசேனனென்னுங்
கந்தருவனைநோக்கி,'கோதுஇலாத-குற்றமில்லாத, குனி சிலை- வளைந்த
காண்டீவவில்லையுடையவீரற்கு-வீரனாகியஅருச்சுனனுக்கு, மோது போர்
தர - தாக்கிச்செய்கின்ற யுத்தத்தைக் கொடுக்கும்படி, [அருச்சுனனுடனே
எதிர்த்துவந்து போர்செய்தற்கு],மொய்ம்பு உடை வஞ்சர் பால் -
வலிமையையுடைய வஞ்சகராகிய அசுரரிடத்து, தூது போகு-தூது
செல்வாயாக,'என - என்றுசொல்லி, போக்கி - (அவனைமுன்னே)
அனுப்பிவிட்டு,-(எ-று.)

     இனி,மொய்ம்பு உடை வஞ்சர் -(பகைவரது) வலிமையை உடைக்கின்ற
[அழிக்கின்ற]மாயையையுடையவர் எனவுமாம்: பால்- ஏழனுருபு.
சித்திரசேனனென்னுஞ் சொல்லுக்கு - பலவகைச் சேனையுடையவனென்று
பொருளாம்.  இவன், விசுவாவசு என்னுங் கந்தருவனது குமாரன்: சங்கீத
பரதங்களில் வல்லவன்:
அருச்சுனனுக்குஇசைநாடகங்களைக்கற்பித்துக்
கொடுத்தவன்.                                                (216)