பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்159

கன்றுநெஞ்சினர் கண்கள்செந்தீயுகத்
துன்றுகோபத் துடனவர்சொல்லுவார்.

     (இ-ள்.) என்றுதூதன் இசைத்தது கேட்டலும் - இவ்வாறு தூதுவன்
சொன்ன வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், அவர் - அசுரர்கள்,-கன்றும்
நெஞ்சினர் - வெதும்பின மனத்தையுடையவராய், கண்கள் செம் தீ உக -
கண்களிலிருந்து சிவந்த நெருப்புப்பொறி சிந்த, துன்று கோபத்துடன் -
மிகுந்த கோபத்தோடே, நன்று என - (நீ சொன்னவார்த்தை)
நன்றாயிருந்ததென்றுசொல்லி, கை புடைத்து நகைத்திடா - கைகொட்டிச்
சிரித்து, சொல்லுவார் - (சில வார்த்தைகளைச்)சொல்லுபவரானார்கள்;
(எ-று.)-அவற்றை மேல்நான்குகவிகளிற் காண்க.

     நன்று -இகழ்ச்சிக்குறிப்பு.  நெஞ்சினர் - குறிப்புவினைமுற்றெச்சம்;
[நன்- வினை-32.]கோபத்துடன், உடன் - மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு;விசேஷணப்பொருளது.                        (222)

47.-இதுமுதல்மூன்று கவிகள் - ஒருதொடர்:ஒரு
மானுடன் பொரவருவதுகுறித்து அலட்சியமாகச்சொல்லி,
அவுணர் சீறுதல்.

பூசையொன்று புலியின்குழாத்துடன்
ஆசைகொண்டு பொரவந்தழைப்பதே
வாசவன்பெரு வாழ்வுக்கெலாமொரு
நாசம்வந்து புகுந்ததெனாநகா.

     (இ-ள்.) பூசைஒன்று - (ஒருதுணையுமில்லாமல்தனித்து நின்ற) ஒரு
பூனை, புலியின் குழாத்துடன்- புலிக்கூட்டத்துடனே, பொர -
போர்செய்தற்கு, ஆசை கொண்டு - விருப்பங்கொண்டு, வந்து அழைப்பது
ஏ - (துணிந்து) வந்து கூப்பிடுவதா?  வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் -
இந்திரனது பெரிய வாழ்க்கைகளெல்லாவற்றுக்கும், ஒரு நாசம் வந்து
புகுந்தது - ஒரு அழிவு வந்துநேர்ந்தது, எனா- என்று சொல்லி, நகா -
சிரித்து;(எ-று).-"என்றுகொதித்திட்டார்"(49) என்று முடியும்.

     பலபராக்கிரமங்களில்லாத மனிதனொருவன்அவற்றில் மிகுந்த
அசுரர்திரளோடு பொரவிரும்பி அழைப்பதா என்னும்
பொருளைத்தந்ததனால்,முன்னிரண்டடி, 'பிறிதுமொழிதல்'என்னும்
அலங்காரம்: இது, ஒட்டணியென்றும் சொல்லப்படும்: வடநூலார்
'அப்ரஸ்துதப்ரசம்ஸாலங்காரம்'என்பர்:உபமேயத்தைக் கூறாமல்
உபமானத்தாற் பெறவைத்தல் இவ்வணியின் இலக்கணமாம்.  பூனை
புலிக்கூட்டத்தைப் போருக்கு அழைத்தல் இல்பொருளுவமை.  அழைப்பதே
என்பதில் ஏகாரம்-வினாவகையால்,வியப்பைஉணர்த்திற்று. அருச்சுனனை
இந்திரன்மைந்தனென்று அறிந்து, 'இந்திரன்வாழ்வுக்கெலாம் நாசம் வந்தது'
என்றார். வாசவன் - அஷ்ட வசுக்களுக்குத் தலைவன்: அல்லது, எல்லா
ஐசுவரியமு முடைய