பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்161

    செயும்-ஏவற்பன்மை.  அனுசரும் அவுணரும் சிலைகுனியும்-
முன்னிலையிற்படர்க்கைவந்தஇடவழுவமைதி.  குனி - முதனிலைத்
தொழிற்பெயர்.  தம்பியரென்று பொருளுள்ள அநுசரென்பது, இங்கு
இளையோரைக்காட்டிற்று.                            (225)

50.-தமதுசெல்வநாடுகளைப்பகை கவரக்கொடுத்த
வில்வீரனாஎம்மை எதிர்க்க வருபவ னென்று அவுணர்
ஏளனமாக் கூறுதல்.

செங்கணாகக்கொடியவன்செல்வமும்
தங்கணாடுங்கவரத்தரிப்பறப்
பொங்குகானிற் புகுஞ்சிலைவீரனோ
எங்களோடு மெதிர்க்கவந்தெய்தினான்.

                   இரண்டு கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) செம்கண் நாகம் கொடியவன் - (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடையபாம்பின்வடிவத்தை யெழுதிய துவசத்தையுடைய
துரியோதனன், தங்கள் நாடுஉம் செல்வம்உம் கவர - தங்களது தேசத்தையும்
மற்றைச் செல்வங்களையும்பறித்துக்கொள்ள, தரிப்பு அற - நிற்பதற்கும்
இடமில்லாமல், பொங்கு கானில் புகும்-(வெப்பம்) மிகுந்த காட்டிற் சென்ற,
சிலைவீரன் ஓ - வில்வீரன்தானோ,எங்களோடுஉம் எதிர்க்க வந்து
எய்தினான் - எங்களுடன் எதிர்த்துப் போர்செய்தற்கு வந்து சேர்ந்தான்?

     செங்கண்என்பதை-நாகத்துக்காயினும், கொடியவனுக்காயினும் இயைக்க.
"நாகக்கொடியவன்" என்றது-அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நன்றியறிவின்மையையும், நா இரண்டுடைமையையும், வக்கிரகதியிற்
செல்லுதலையும்குறிப்பிக்கு மென்றற்குப் போலும். நாகக்கொடியவன் -
நாகம்போலக் கொடுந்தன்மையை யுடையவ னென்றுமாம். 'தங்கள்'என்றது,
தருமன் முதலியோரையும் உளப்படுத்தி. தரிப்பு - தரிக்குமிடம்;
தொழிலாகுபெயர்: தரித்தல் - தங்குதல். இங்கே 'வீரன்'என்றது, இகழ்ச்சி. (226)

51.-சேனைசூழப்பேராரவாரஞ்செய்துகொண்டு அவுணர்
திரளுதல்.

என்றுகூறியிகலசுராதிபர்
துன்றுசேனைக்குழாம்புடைசூழ்வரச்
சென்றுகாந்தத்திரைக்கடலார்ப்பபோல்
ஒன்றயாருமொருங்குசென்றுற்றனர்.

     (இ-ள்.) என்றுகூறி-,இகல் அசுர அதிபர் - வலிமையையுடைய
அசுரத் தலைவர்கள்,யார்உம் - எல்லோரும், துன்று சேனைகுழாம் புடை
சூழ்வர - நெருங்கிய சேனைகளின்கூட்டம் பக்கங்களிற் சூழ்ந்து வரும்படி,
உக அந்தம் திரை கடல் சென்று