பக்கம் எண் :

162பாரதம்ஆரணிய பருவம்

ஆர்ப்ப போல -யுகமுடிவு காலத்தில் அலைகளையுடையகடல்கள் பொங்கி
வெளியெழுந்து ஆரவாரிப்பனபோல (ஆரவாரித்து), ஒன்ற - நெருங்க,
ஒருங்கு - ஓரிடத்தில், சென்று உற்றனர்-வந்து கூடினார்கள்; (எ-று.)

     உகாந்தம்='யுகாந்தம்':என்றது, பிரளயத்தை. ஒன்ற-ஒருசேர என்றபடி,
ஆர்ப்ப-பலவின்பால் வினையாலணையும்பெயர்;ஆர்ப்பது என்னுந்
தொழிற்பெயரின் விகாரமாகவுமாம்.                          (227)

52.-அசுரர்போருக்குப் புறப்படுதல்.

ஆனைதேர்பரியாளெனுநால்வகைத்
தானையோடுமெழுந்தனர்தானவர்
வானுமண்ணுந் திசையுமற்றெண்பெறும்
ஏனைலோகமுமெங்குநடுங்கவே.

     (இ-ள்.)வான்உம் - தேவலோகமும், மண்உம் - பூலோகமும்,
திசைஉம் - திக்குக்களும், மற்று எண் பெறும் ஏனைலோகம்உம்-இன்னும்
(இவற்றுடன் வைத்து) எண்ணப்பெறுகின்ற மற்றையுலகமாகிய பாதாளமும்,
எங்குஉம் - எல்லாவிடமும், நடுங்க-(அதிர்ச்சியால்) நடுக்க மடையும்படி,
ஆனை-கஜம்,தேர்-ரதம், பரி-துரகம், ஆள்-பதாதி, எனும்-என்கின்ற, நால்
வகை தானையோடுஉம்-சதுரங்கசைனியத்துடனே, தானவர்-அசுரர்கள்,
எழுந்தனர்-(போருக்குப்) புறப்பட்டார்கள்;(எ-று.)

     ஆனை-யானையென்பதன் மரூஉ;மதத்தாற் கதஞ்சிறந்து தானும்
போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக் கூறினார்;கம்பரும்
"கசரததுரகமாக்கடல்கொள் காவலன்" என இவ்வாறு கூறியிருத்தல்
காண்க: இது, தமிழர்வழக்கு;வடநூலார், 'ரதகசதுரகபதாதி'என
முறைப்படுத்திக் கூறுவர்.                              (228)

53.-அப்போதுபலவகை வாச்சியங்க ளொலித்தல்.

சங்கும்பேரியுந் தாரையுஞ்சின்னமும்
துங்கமாமுழ வுந்துடியீட்டமும்
அங்கண்மாமுர சும்முகவந்தத்தில்
பொங்கும்வேலையொலியிற்புலம்பவே.

             இதுமுதல் மூன்றுகவிகள் - குளகம்.

     (இ-ள்)சங்குஉம் - சங்கங்களும், பேரிஉம் - பேரிகைகளும்,
தாரைஉம் சின்னம்உம் - தாரை திருச்சின்னம் என்னும் ஊதுகருவிகளும்,
துங்கம் மா முழவுஉம் - உயர்ந்த பெரிய மிருதங்கங்களும், துடி ஈட்டம்உம்
- உடுக்கை முதலிய பறைகளின் கூட்டமும், அம் கண் மா முரசுஉம் -
அழகிய அடிக்குமிடத்தையுடைய பெரிய முரசங்களும், (ஆகப் பலவகை
வாத்தியங்கள்), உகம் அந்தத்தில் பொங்கும் வேலைஒலியின் - யுகமுடிவு
காலத்திற் கிளர்ந்தெழு