பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்163

கின்ற கடல்களின்ஓசைபோல, புலம்ப - ஒலிக்கவும்,-(எ-று.)- இச்செய்யுளில்
'புலம்ப'என்பதும், மேற்செய்யுளில் 'மிடைய'என்பதும், அதன் மேற்கவியிலுள்ள
'வளைத்தார்'என்பதோடு முடியும்.

     சங்கு, முரசு -வடசொற்றிரிபுகள்.  முழா என்னுங் குறியதன் கீழ்
ஆக்குறுகி உகரமேற்று, 'முழவு'என நின்றது;[நன்- உயிர் - 22.]கண்-
வாச்சியத்தில் அடிக்கப்படும் இடம்;வாரினாற்கட்டப்படுகிற கண்களுமாம்.
புலம்பல் - ஒலித்தல்;இனி, புலம்ப-(மேல் நிகழும் அசுரநாசத்தைக் கருதி)
அழ என்றுமாம்.  பிரளய காலத்திற் கடல்பொங்கி உலகை யழிக்கு
மென்பது, நூற்றணிபு                                     (229)

54.-அசுரர்களின்பலவகைப்போர்க்கருவிகள்
நெருங்குதல்.

சூலநேமியெழுமழுத்தோமரம்
கோலும்வார்சிலைகுந்தங்கொடுங்கணை
நாலுதானைநடுவுஞ்சுடரயில்
வேலும்வாளின் விதமுமிடையவே.

     (இ-ள்.)சூலம்-சூலங்களும், நேமி - சக்கரங்களும், எழு - வளை
தடிகளும், மழு - பரசுகளும், தோமரம் - தோமரங்களும், கோலும் வார்
சிலை- வளைதற்குஉரிய நீண்ட விற்களும், குந்தம் - ஈட்டிகளும், கொடு
கணை- கொடிய அம்புகளும், நாலு தானைநடுஉம் சுடர் அயில் வேல்உம்
- நால்வகைச் சேனையின்நடுவிலும் விளங்குகின்ற கூர்மையையுடைய
வேல்களும், வாளின் விதம்உம்-வாட்களின் வகைகளும், (ஆகிய பலவகை
ஆயுதங்கள்), மிடைய - நெருங்கவும்-(எ-று.)

     தோமரம்என்று-இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும்
பெயர்.  நாலு - நான்கு என்பதன் திரிபு.  காத்தற்றொழிலன்றி
அழித்தற்றொழில்பூண்ட முக்கட்கடவுட்குங் கூற்றுவனுக்குஞ் சூலவேல்
படையாதலாலும் முருகற்கு வேல் ஆயுதமாதலாலும், சான்றோர்வேலையே
சிறப்பப் பெரும்பான்மை கூறுதல்பற்றி, அதற்கு'நாலுதானைநடுவுஞ்சுடர்'
என்னும் விசேஷணங்கொடுத்தார்;இனி, இவ்வடைமொழியை வாளுக்குங்
கூட்டுதலும் ஒன்று.  வாள்-ஈர்வாள், உடைவாள், எறிவாள் எனப் பலவகைப்
படுதலால், 'வாளின்விதம்'என்றது.                            (230)

55.-அருச்சுனன்தனித்தேரை
அசுரர்தேர்களெல்லாம் சுற்றிக்கொள்ளுதல்.

முந்துகோப வசுரர்முடுகுதேர்
உந்துவீர னொருதனித்தேரினை
வந்துசூழ வளைத்தார்மதுமலர்க்
கொந்துசூழ்வரி வண்டின்குழாத்தினே.